குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு, குடியரசு துணைத்தலைவர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
06 FEB 2026 9:22PM by PIB Chennai
ஜிம்பாப்வே நாட்டின் ஹராரேவில் நடைபெற்ற19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பைத் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்ற இந்தியாவின் இளம் வீரர்களுக்கு குடியரசு துணைத்தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
சமூக ஊடக பதிவு ஒன்றில் தமது கருத்துக்களைப் பகிர்ந்திருக்கும் அவர், ஆறாவது முறையாக இந்தியா கோப்பையைக் கைப்பற்றி இருக்கும் இந்த வெற்றியை, வரலாற்றுச் சிறப்புமிக்க மகத்தான சாதனை என்று வர்ணித்துள்ளார்.
குறிப்பாக, அற்புதமாக விளையாடிய இளம் வீரர் வைபவ் சூரியவன்ஷிக்கு திரு சி.பி. ராதாகிருஷ்ணன் பாராட்டு தெரிவித்தார். ஒட்டுமொத்த நாட்டிற்கும் பெருமை தேடித்தந்ததற்காக, அணித்தலைவர் ஆயுஷ் மாத்ரே மற்றும் அணியினர் அனைவருக்கும் அவர் தமது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.
***
(Release ID: 2224730)
TV/BR/RK
(வெளியீட்டு அடையாள எண்: 2224861)
வருகையாளர் எண்ணிக்கை : 6