ரெயில்வே அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சென்னை பூங்கா, சிதம்பரம், திருவண்ணாமலை உட்பட நாடு முழுவதும் 172 ரயில் நிலையங்களை அமிர்த பாரத நிலைய திட்டத்தின் கீழ் தரம் உயர்த்தும் பணிகள் நிறைவடைந்துள்ளன: நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் தகவல்

இடுகை இடப்பட்ட நாள்: 06 FEB 2026 5:24PM by PIB Chennai

அமிர்த பாரத நிலைய திட்டத்தின் கீழ் ரயில் நிலையங்களை தரம் உயர்த்துவதற்கு நாடு முழுவதும் இதுவரை 1337 நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தின் கீழ் பணிகள் சீரான வேகத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரை 172 ரயில் நிலையங்களை தரம் உயர்த்தும் பணிகள் நிறைவடைந்துள்ளன.

தமிழ்நாட்டில் சென்னை பூங்கா, சிதம்பரம், சின்ன சேலம், காரைக்குடி சந்திப்பு, மன்னார்குடி, மொரப்பூர், பொள்ளாச்சி சந்திப்பு, சாமல்பட்டி, சோழவந்தான், ஸ்ரீரங்கம், ஸ்ரீவில்லிபுத்தூர், பரங்கிமலை, திருவாரூர் சந்திப்பு, திருவண்ணாமலை, விருத்தாச்சலம் சந்திப்பு முதலிய நிலையங்களைத் தரம் உயர்த்தும் பணிகள் முடிவடைந்துள்ளன.

கேரள மாநிலத்தின் திரு ரயில் நிலையம் இப்போது சென்னை, தில்லி, மும்பை கொல்கத்தா போன்ற நாட்டின் முக்கிய நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப் பூர்வமாக அளித்த பதிலில் மத்திய ரயில்வே, தகவல் மற்றும் ஒலிபரப்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

***

(Release ID: 2224512)

TV/BR/RK


(வெளியீட்டு அடையாள எண்: 2224831) வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Kannada , Malayalam