சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களில் 2011-ம் ஆண்டு முதல் இதுவரை 170 பெண் நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்
இடுகை இடப்பட்ட நாள்:
06 FEB 2026 1:33PM by PIB Chennai
உச்சநீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களுக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 124, 217 மற்றும் 224 ஆகிய பிரிவுகளின் கீழ், நீதிபதிகள் நியமனம் செய்யப்படுகின்றனர். இந்த நீதிபதிகள் நியமனத்தில் எந்தவொரு சாதிக்கும் அல்லது பிரிவினருக்கும் இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை.
உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகளை நியமிப்பதற்கான முன்முயற்சிகளைத் தொடங்கும் பொறுப்பு தலைமை நீதிபதியிடம் உள்ளது. அதே சமயம் உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகளை நியமனம் செய்வதற்கான நடைமுறைகள் சம்பந்தப்பட்ட உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியிடம் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் நீதித்துறையில் சமூகம் சார்ந்த பன்முகத்தன்மையை மேம்படுத்துவதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளது.
2014-ம் ஆண்டு முதல் உயர்நீதிமன்றங்களில் 170 பெண் நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் கடந்த 5 ஆண்டுகளில் 96 நீதிபதிகளும் உச்சநீதிமன்றத்தில் 6 நீதிபதிகளும் அடங்குவர். உச்சநீதிமன்றத்தில் கொலிஜியத்தால் பரிந்துரைக்கப்படும் நபர்கள் மட்டுமே உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகளாக நியமிக்கப்படுகின்றனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2224358®=3&lang=1
***
TV/SV/KPG/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2224630)
வருகையாளர் எண்ணிக்கை : 16