பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய மகளிர் மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் திருமதி சாவித்ரி தாக்கூர், கௌதமாலா சமூக மேம்பாட்டுத் துறை துணை அமைச்சர் கிளாடியா தெரசா வலென்சுலா லோபஸுடன் சந்திப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 05 FEB 2026 12:22PM by PIB Chennai

நியூயார்க்கில் உள்ள சமூக மேம்பாட்டு ஆணையத்தின் கூட்ட அமர்வு அமெரிக்காவின் நியூயார்க்கில் 2026 பிப்ரவரி 02 முதல் பிப்ரவரி 10 வரை நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பில் மத்திய மகளிர், குழந்தைகள் மேம்பாட்டு துறை இணையமைச்சர் திருமதி சாவித்ரி தாக்கூர் பங்கேற்றுள்ளார். இந்த கூட்டங்களுக்கு இடையே, கௌதமாலா நாட்டின் சமூக மேம்பாட்டுத் துறை துணை அமைச்சர் திருமதி கிளாடியா தெரசா வலென்சுலா லோபஸை, திருமதி சாவித்ரி தாக்கூர் சந்தித்துப் பேசினார். 

 

கலந்துரையாடல்களின் போது, பெண்கள் தலைமையிலான உள்ளடக்கிய வளர்ச்சிக்கான இந்தியாவின் முழு அணுகுமுறையை திருமதி சாவித்திரி தாகூர் எடுத்துரைத்தார். சமூகப் பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம், ஊட்டச்சத்து, திறன் மேம்பாடு, டிஜிட்டல் அதிகாரமளித்தல், பெண்களின் பொருளாதார பங்கேற்பு ஆகியவற்றில் மேற்கொள்ளப்படும் முக்கிய முயற்சிகளையும் அவர் விளக்கினார். முதன்மைத் திட்டங்களில் இந்தியாவின் அனுபவத்தை அவர் பகிர்ந்து கொண்டார். சிறந்த நடைமுறைகளை கௌதமாலாவுடன் பகிர்ந்து கொள்ள இந்தியா தயாராக இருப்பதாகவும் திருமதி சாவித்திரி தாக்கூர் தெரிவித்தார்.

 

அங்குள்ள இந்திய சமுதாயத்தினர் உடனும் அமைச்சர் கலந்துரையாடினார். மகளிர் மேம்பாட்டுக்காக அரசால் தொடங்கப்பட்டுள்ள பன்குடி (Pankhudi) தளம் பற்றிய விவரங்களையும் அவர் பகிர்ந்து கொண்டார். தன்னார்வ முறையில் இந்தியாவில் உள்ள அங்கன்வாடி மையங்கள், குழந்தை பராமரிப்பு இல்லங்களை ஆதரிப்பதன் மூலம் இந்தியாவின் வளர்ச்சிக்கு தீவிரமாக பங்களிக்குமாறு அங்குள்ள இந்திய சமூகத்தினரை மத்திய இணையமைச்சர் திருமதி சாவித்திரி தாக்கூர் கேட்டுக்கொண்டார்.

 

(Release ID: 2223630)

****

TV/PLM/SH

 


(வெளியீட்டு அடையாள எண்: 2224026) வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Gujarati , Malayalam