சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் 73 விரைவு நீதிமன்றங்கள் மூலம் கடந்த 3 ஆண்டுகளில் 87,796 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன

இடுகை இடப்பட்ட நாள்: 05 FEB 2026 1:02PM by PIB Chennai

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சம்பந்தப்பட்ட உயர்நீதிமன்றங்களுடன் கலந்தாலோசித்து தேவைகளுக்கு ஏற்ப வழக்கு விசாரணைகளை விரைந்து முடிக்க ஏதுவாக விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படுகின்றன.

இந்த வகையில்  நாடு முழுவதும் 2015 முதல் 2020-ம் ஆண்டு வரை 1,800 விரைவு நீதிமன்றங்களை அமைக்க 14-வது நிதிக்குழு பரிந்துரை செய்துள்ளது.  இதன்படி 2025 டிசம்பர் 31-ம் தேதி நிலவரப்படி 22 மாநிலங்கள்  மற்றும் யூனியன் பிரதேசங்களில் 880 விரைவு நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன.

தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் 73 விரைவு நீதிமன்றங்கள் மூலம் கடந்த 3 ஆண்டுகளில் 87,796 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன. இத்தகைய விரைவு நீதிமன்றங்கள் நிலுவையில் உள்ள வழக்குகளில் எண்ணிக்கையைக் குறைக்க வகை செய்கிறது. உயர்நீதிமன்றங்களிலிருந்து பெறப்பட்ட தகவல்களின்படி கடந்த 3 ஆண்டுகளில் 40,26,982 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில் மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் திரு அர்ஜூன்ராம் மெக்வால் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2223645&reg=3&lang=1  

----

TV/SV/KPG/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2223998) வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी