புவி அறிவியல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரித்வி திட்டத்தின் முக்கிய நோக்கங்கள்

प्रविष्टि तिथि: 05 FEB 2026 11:44AM by PIB Chennai

வானிலை தொடர்பான பிரித்வி விக்யான் (பிரித்வி) திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்கள்:

* வளிமண்டலம்கடல்புவிக்கோளம் ஆகியவற்றின் தன்மைகளை கண்காணித்து முக்கிய அம்சங்களைப் பதிவு செய்தல்.

* இதன் ஆராய்ச்சி - மேம்பாட்டை மேற்கொள்ளத் தேவையான உள்கட்டமைப்பை உருவாக்குதல்.

* வானிலைகடல்,  பருவநிலை ஆபத்துகளை கண்டறிய மாதிரி அமைப்புகளை உருவாக்குதல்.

* நிலநடுக்கங்களைக் கண்காணித்து நில அதிர்வு அபாய மதிப்பீட்டை மேற்கொள்ளுதல்

* புதிய வளங்களைக் கண்டுபிடிப்பதற்காக பூமியின் துருவஉயர் கடல் பகுதிகளை ஆராய்தல்.

* சமூக பயன்பாடுகளுக்காக கடல் வளங்களை ஆராய்வதற்கான தொழில்நுட்பங்களை உருவாக்குதல்.

*புவி அறிவியலில் திறமையானபயிற்சி பெற்ற மனிதவளத்தை உருவாக்குதல்.

பிரித்வி திட்டத்தின் கீழ்பல்வேறு புவியியல் சூழல்களில் கண்காணிப்பு அமைப்புகளையும்எச்சரிக்கை சேவைகளையும் வலுப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடையப்பட்டுள்ளது.

கண்காணிப்பு வலையமைப்புகள்

டாப்ளர் வானிலை ரேடார் கட்டமைப்பு 47 ஆக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. உலகளாவிய பருவநிலை கண்காணிப்பு அமைப்புமேல் பகுதி காற்று கட்டமைப்பு ஆய்வு நிலையங்கள் 6-லிருந்து 12 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன. 400 தானியங்கி வானிலை நிலையங்கள் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் கிழக்குமேற்கு கடற்கரைப் பகுதிகளில் உள்ள அதிவேக காற்று வேக பதிவு மையங்கள் 37 ஆக விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் பரந்த கடற்கரையோரத்தில் வசிக்கும் அனைத்து கடலோர மக்களுக்கும் சுனாமிஉயர் அலை எச்சரிக்கைகள்புயல்எண்ணெய் கசிவுகள்ஹில்சா மீன்வள ஆலோசனை சேவைதீங்கு விளைவிக்கும் பாசிப் பூக்கள்  போன்றவை குறித்து மேம்பட்ட எச்சரிக்கை சேவைகள் வழங்கப்படுகின்றன.

இந்தத் தகவலை மத்திய புவி அறிவியல் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்..

***

(Release ID: 2223585)

TV/PLM/SH


(रिलीज़ आईडी: 2223973) आगंतुक पटल : 71
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Punjabi