புவி அறிவியல் அமைச்சகம்
புயல் முன்னறிவிப்புகளின் துல்லியத்தன்மை மேம்பட்டுள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
05 FEB 2026 11:50AM by PIB Chennai
கடந்த பத்தாண்டுகளில், கண்காணிப்பு, பகுப்பாய்வு மற்றும் முன்கணிப்பு கருவிகள் மற்றும் நுட்பங்களின் தொடர்ச்சியான மேம்படுத்தல், மேம்பட்ட தரவு ஒருங்கிணைப்பு, உயர் தெளிவுத்திறன், மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம், எச்சரிக்கை தயாரிப்புகள் உருவாக்கம், பரவல் உள்ளிட்ட கணினி பயன்பாட்டில் மேம்பாடுகள் காரணமாக புயல் முன்னறிவிப்பு துல்லியத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. முந்தைய ஐந்து ஆண்டுகளுடன் (2016-2020) ஒப்பிடும்போது, அண்மைய ஐந்து ஆண்டுகளில் (2021-2025) பாதை முன்னறிவிப்பு துல்லியத்தில் 20 முதல் 25% வரையும் கரையைக் கடத்தல் மற்றும் தீவிரத் தன்மை (அதிகபட்ச நிலையான காற்று) முன்னறிவிப்பு துல்லியத்தில் 35 முதல் 45% வரையும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
எச்சரிக்கை உள்கட்டமைப்பின் கண்காணிப்பு, முன்னறிவிப்பு மற்றும் பரப்புதலை மேலும் மேம்படுத்துவதற்காக, மத்திய அரசு 2025-ன் தொடக்கத்தில் மிஷன் மௌசம் திட்டத்தைத் தொடங்கியது. இது இந்தியாவின் வானிலை கண்காணிப்பு வலையமைப்பு மற்றும் முன்னறிவிப்பு அமைப்புகளை விரிவுபடுத்தி நவீனமயமாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதில் வானிலை நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரித்தல், ரேடார் வலையமைப்புகளை மேம்படுத்துதல், உயர் செயல்திறன் கணினி அமைப்புகள் மற்றும் துல்லிய முடிவு ஆதரவு அமைப்புகள் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த ஆதரவுடன் முன்னறிவிப்பு துல்லியத்தை மேம்படுத்த எந்திரக் கற்றலையும் நவீன மாதிரிகளையும் பயன்படுத்துதல் ஆகியவை அடங்கும்.
இந்தத் தகவலை மத்திய புவி அறிவியல் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று (2026, பிப்ரவரி 5) மாநிலங்களவையில் தெரிவித்தார்.
***
(Release ID: 2223598)
TV/SMB/RK
(வெளியீட்டு அடையாள எண்: 2223947)
வருகையாளர் எண்ணிக்கை : 13