மக்களவை செயலகம்
திரு எம். அனந்தசயனம் அய்யங்காருக்கு மக்களவைத் தலைவர் மலர் மரியாதை செலுத்தினார்
இடுகை இடப்பட்ட நாள்:
04 FEB 2026 2:20PM by PIB Chennai
முன்னாள் மக்களவைத் தலைவர் திரு எம். அனந்தசயனம் அய்யங்காரின் பிறந்தநாளையொட்டி, இன்று நாடாளுமன்ற மைய மண்டபத்தில் அவருக்கு மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா மலர் மரியாதை செலுத்தினார்.
மாநிலங்களவை துணைத் தலைவர் திரு ஹரிவன்ஷ், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் மக்களவை தலைமைச் செயலாளர் திரு உத்பல் குமார் சிங் ஆகியோரும் திரு அய்யங்காருக்கு மரியாதை செலுத்தினர்.
திரு எம்.ஏ. அய்யங்கார் ஒரு மூத்த சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் புகழ்பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். அவர் மத்திய சட்டமன்றம், அரசியல் நிர்ணய சபை, தற்காலிக நாடாளுமன்றம் மற்றும் முதல் மூன்று மக்களவைகள் ஆகியவற்றில் உறுப்பினராக இருந்தார். 1952-ல் முதல் மக்களவை அமைக்கப்பட்டபோது, திரு அய்யங்கார் அதன் துணை சபாநாயகராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதற்கு முன்னர் அவர் அரசியல் நிர்ணய சபையின் துணை சபாநாயகராகவும், தற்காலிக நாடாளுமன்றத்தின் துணை சபாநாயகராகவும் பணியாற்றியிருந்தார். அப்போதைய சபாநாயகர் திரு ஜி.வி. மாவலங்கரின் திடீர் மறைவுக்குப் பிறகு, 1956 மார்ச் 8 அன்று மக்களவைக்குத் தலைமை தாங்க அவர் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1957-ல் இரண்டாவது மக்களவையின் சபாநாயகராக திரு அய்யங்கார் மீண்டும் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மூன்றாவது மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட போதிலும், பீகார் ஆளுநராகப் பதவி ஏற்பதற்காக அவர் விரைவில் தமது பதவியை ராஜினாமா செய்தார்.
திரு அய்யங்கார் 1978 மார்ச் 19 அன்று காலமானார்.
***
(Release ID: 2223024)
TV/PKV/RK
(வெளியீட்டு அடையாள எண்: 2223489)
வருகையாளர் எண்ணிக்கை : 7