சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
ஆயுஷ்மான் பாரத் - பிரதமரின் மக்கள் ஆரோக்கியத் திட்டத்தின் கீழ், 15,733 தனியார் மருத்துவமனைகள் இணைக்கப்பட்டன- மத்திய இணையமைச்சர் திரு பிரதாப்ராவ் ஜாதவ்
இடுகை இடப்பட்ட நாள்:
03 FEB 2026 2:16PM by PIB Chennai
ஆயுஷ்மான் பாரத் - பிரதமரின் மக்கள் ஆரோக்கியத் திட்டத்தின் கீழ், 31.12.2025 வரை 15,733-க்கும் அதிகமான தனியார் மருத்துவமனைகள் இணைக்கப்பட்டுள்ளன. இவற்றில் முன்னோடி மாவட்டங்களில் உள்ள 1259 மருத்துவமனைகள் இணைக்கப்பட்டுள்ளன. ஆயுஷ்மான் பாரத் – பிரதமரின் மக்கள் ஆரோக்கியத் திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ள தனியார் மருத்துவமனைகள் குறித்த பட்டியலை https://hem.nha.gov.in/search என்ற இணையதளத்தில் காணலாம்.
இத்தகவலை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திரு பிரதாப்ராவ் ஜாதவ் மாநிலங்களவையில் இன்று எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்தச் செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2222495®=3&lang=1
****
TV/IR/KPG/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2222778)
வருகையாளர் எண்ணிக்கை : 6