பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

திரிபுராவின் வளர்ச்சிப் பயணத்தில் விரைவான வேகத்தைப் பெற ‘வளர்ச்சியும் பாரம்பரியமும்’ என்ற மந்திரத்தை ஏற்றுக்கொண்டது எவ்வாறு உதவியது என்பதை வலியுறுத்தும் கட்டுரையைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 03 FEB 2026 2:15PM by PIB Chennai

'வளர்ச்சியும் பாரம்பரியமும் ' என்ற மந்திரத்தை ஏற்றுக்கொண்டது  திரிபுரா தனது வளர்ச்சிப் பயணத்தில் விரைவான வேகத்தைப் பெற எவ்வாறு உதவியது என்பதை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வலியுறுத்தியுள்ளார்.

திரிபுராவிற்கு அண்மையில் மேற்கொண்ட பயண அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட மத்திய அமைச்சர் திரு ஜோதிராதித்ய எம். சிந்தியாவின் சமூக வலைதள பதிவிற்கு பதிலளித்த அவர், மாநிலத்தின் மாறிவரும் நிலைமையையும் அதன் மகத்தான ஆற்றலையும் எடுத்துரைத்துள்ளார். உள்கட்டமைப்பு மற்றும் தொழில்துறை வளர்ச்சியில் மட்டுமின்றி , அதன் வளமான கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாப்பதிலும் கொண்டாடுவதிலும் திரிபுரா முன்னேறி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி பதிவிட்டிருப்பதாவது:

"'வளர்ச்சியும் பாரம்பரியமும் ' என்ற மந்திரத்தை ஏற்றுக்கொள்வதன் மூலம், திரிபுரா விரைவான வளர்ச்சியைப் பெற்றுள்ளது; ஒவ்வொரு நாளும் புதிய சாதனைகளைப் பதிவு செய்கிறது. மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய எம்.சிந்தியா @JM_Scindia, திரிபுராவிற்கு மேற்கொண்ட பயணத்தின் அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார். மாநிலத்தின் மாறிவரும் நிலைமையையும் மகத்தான ஆற்றலையும் விவரித்துள்ளார். அவரது கட்டுரையைப் படியுங்கள்..."

(Release ID: 2222494)

****

TV/SMB/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2222762) வருகையாளர் எண்ணிக்கை : 9