ஜவுளித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

விருதுநகரில் பிஎம் மித்ரா ஜவுளி பூங்கா அமைப்பதற்கு 100 சதவீத அளவிற்கு நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது - மத்திய இணையமைச்சர் திரு பபித்ரா மார்கரெட்டா

இடுகை இடப்பட்ட நாள்: 03 FEB 2026 1:38PM by PIB Chennai

பிரதமரின்  பெரும் ஒருங்கிணைந்த ஜவுளிப் பிராந்தியம் மற்றும் ஆடை பூங்காக்களை (பிஎம் மித்ரா) விருதுநகர், தெலங்கானாவில் வாரங்கல், குஜராத்தில் நவசாரி, கர்நாடகாவில் கலபுரகி, மத்தியப்பிரதேசத்தில் தார், உத்தரப்பிரதேசத்தில் லக்னோ, மகராஷ்டிராவில் அமராவதி ஆகிய 7 இடங்களில் அமைப்பதற்கு மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 2027-28-ம் ஆண்டு வரை 7 ஆண்டு காலத்திற்கு ரூ.4,445 கோடி ஒதுகீட்டில் இது செயல்படுத்தப்பட உள்ளது. இந்த பிஎம் மித்ரா திட்டம் நேரடியாக ஒரு லட்சம் பேருக்கும், மறைமுகமாக இரண்டு லட்சம் பேருக்குமென  மொத்தம் 3 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக ஒரு பூங்காவிற்கு ரூ.10,000 கோடி முதலீடு செய்வதென்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

பூங்காக்களுக்கு முதலீட்டை ஈர்க்கவும், திறம்பட அமல்படுத்தவும், மாநிலங்கள், முதலீட்டாளர்கள், சர்வதேச, தேசிய மற்றும் உள்ளூர் நிலையில் பல்வேறு பிரதிநிதிகளுடன் 200-க்கும் மேற்பட்ட ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் விருதுநகரில் பிஎம் மித்ரா பூங்கா அமைப்பதற்கு 100 சதவீத அளவிற்கு நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் அனுமதி மற்றும் தேவையான ஒப்பதல்களும் பெறப்பட்டுள்ளன.

இத்தகவலை மக்களவையில் இன்று மத்திய ஜவுளித்துறை இணையமைச்சர் திரு பபித்ரா மார்கரெட்டா எழுத்துபூர்வாக அளித்த பதிலில் கூறியுள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்தச் செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2222479&reg=3&lang=1

****

TV/IR/KPG/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2222745) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Telugu