சுற்றுலா அமைச்சகம்
மருத்துவ சுற்றுலாவை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் – மத்திய அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத்
प्रविष्टि तिथि:
02 FEB 2026 4:05PM by PIB Chennai
மருத்துவ சுற்றுலா உள்ளிட்ட சுற்றுலா தளங்கள் மற்றும் தயாரிப்புகளின் மேம்பாடு சம்பந்தப்பட்ட மாநில மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகங்கள் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. பல்வேறு முன்முயற்சிகள் மூலம் மருத்துவம் மற்றும் நலவாழ்வு சுற்றுலா உட்பட பல்வேறு சுற்றுலா வகைகளை சுற்றுலா அமைச்சகம் ஊக்குவிக்கிறது.
மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா வருகை தரும் வெளிநாட்டவரின் வசதிக்காக இ-மருத்துவ விசா மற்றும் இ-மருத்துவ உதவியாளர் விசா வசதியை மத்திய அரசு விரிவுபடுத்தியுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ மையங்கள், நலவாழ்வு மையங்கள், விசா, சுகாதார பராமரிப்பாளர்கள் குறித்த தகவல்களை http://www.indiahealthcaretourism.com என்ற இணையதளம் மூலம் வர்த்தக அமைச்சகத்தின் கீழ் உள்ள சேவை ஏற்றுமதி மேம்பாட்டுக் குழுமம் அளித்து வருகிறது.
இத்தகவலை மக்களவையில் இன்று மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இதனைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2222142®=3&lang=1
***
TV/IR/KPG/RK
(रिलीज़ आईडी: 2222380)
आगंतुक पटल : 68