குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கடந்த 5 ஆண்டுகளில் பிரதமரின் வேலை உருவாக்கத் திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் வரை உள்ள சிறிய திட்டங்களுக்கு அதிக உதவி

இடுகை இடப்பட்ட நாள்: 02 FEB 2026 3:34PM by PIB Chennai

பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டம் (பிஎம்இஜிபி) மூலம், கடந்த ஐந்து நிதியாண்டுகளில் (2020–21 முதல் 2024–25 வரை) ரூ.10 லட்சம் வரை திட்டச் செலவு கொண்ட பெரும்பாலான சிறு தொழில் நிறுவனங்களுக்கு உதவி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய  சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை இணையமைச்சர் திருமதி ஷோபா கரண்ட்லாஜே கூறியுள்ளார்.

மாநிலங்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனைத் தெரிவித்துள்ள அவர் மேலும் கூறியதாவது;

உற்பத்தித் துறையில் ரூ.10 லட்சம் வரை திட்டச் செலவு கொண்ட நிறுவனங்களில் சுமார் 63 சதவீதம் நிறுவனங்களும், சேவைத் துறையில் அதே அளவிலான திட்டச் செலவு கொண்ட நிறுவனங்களில் சுமார் 93 சதவீதம் நிறுவனங்களும் இத்திட்டத்தின் கீழ் உதவி பெற்றுள்ளன.

சிறிய திட்டங்களுக்கு கடன் மற்றும் மானியங்களை எளிதாக்க பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  ரூ.10 லட்சத்திற்குக் குறைவான திட்டச் செலவு கொண்ட விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. மேலும், இந்திய ரிசர்வ் வங்கியின்  வழிகாட்டுதலின்படி, ரூ.10 லட்சம் வரை கடன் பெறும் திட்டங்களுக்கு வங்கிகள் எந்தவிதமான உத்தரவாதமும் கேட்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், உற்பத்தித் துறையில் ரூ.10 லட்சம் வரை மற்றும் சேவைத் துறையில் ரூ.5 லட்சம் வரை திட்டச் செலவு கொண்ட திட்டங்களை தொடங்குவதற்கு கல்வித் தகுதி அவசியமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2222116&reg=3&lang=1

***

TV/PKV/RK


(வெளியீட்டு அடையாள எண்: 2222371) வருகையாளர் எண்ணிக்கை : 103
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Punjabi , Gujarati