ஆயுஷ்
azadi ka amrit mahotsav

மத்திய பட்ஜெட் ஒட்டுமொத்த சுகாதார பராமரிப்பு, பாரம்பரிய மருத்துவத்தை வலுப்படுத்துகிறது- மத்திய இணையமைச்சர் திரு பிரதாப்ராவ் ஜாதவ்

இடுகை இடப்பட்ட நாள்: 01 FEB 2026 9:26PM by PIB Chennai

மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 2026-27-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் அனைவருக்கும் சுகாதாரம் மற்றும் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற அரசின் உறுதிப்பாட்டை வலிமையுடன் வலியுறுத்தக் கூடிய தொலைநோக்குப் பார்வை, அனைத்தையும் உள்ளடக்கிய, எதிர்காலம் சார்ந்த பட்ஜெட் என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை மற்றும் ஆயுஷ் துணை இணையமைச்சர் திரு பிரதாப்ராவ் ஜாதவ் பாராட்டியுள்ளார்.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் உறுதியான தலைமையின் கீழ், நாட்டின் தொடக்கநிலை, இரண்டாம் நிலை மற்றும் துணைநிலை சுகாதார பராமரிப்பு முறைகளை வலுப்படுத்தும் நோக்கில் ஒதுக்கீட்டை அதிகரித்து கொள்கை முடிவுகள் மூலம் சுகாதாரத்துறைக்கு தீர்க்கமான உத்வேகத்தை இந்தப் பட்ஜெட் அளிப்பதாக அவர் கூறியுள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்தச் செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2221910&reg=3&lang=1

 

----

TV/IR/KPG/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2222188) வருகையாளர் எண்ணிக்கை : 52
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी