பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியக் கடற்படையின் 2-வது அரை மாரத்தான் போட்டி புதுதில்லியில் நடைபெற்றது

இடுகை இடப்பட்ட நாள்: 01 FEB 2026 8:41PM by PIB Chennai

இந்தியக் கடற்படையின் 2-வது அரை மாரத்தான் போட்டி 2026 பிப்ரவரி 1 அன்று புதுதில்லியில் நடைபெற்றது. 21.1 கி.மீ, 10 கி.மீ, 5 கி.மீ என மூன்று வகைகளில் நடத்தப்பட்ட போட்டிகளில் பல்வேறு தரப்பினரும் மிகுந்த உற்சாகத்துடன் பங்கேற்றனர்.

அரை மாரத்தான் போட்டியை ராணுவ தலைமைத் தளபதி முன்னிலையில் கடற்படைத் தளபதி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். 10 கி.மீ மாரத்தான் போட்டியை மத்திய இளைஞர் நலன், விளையாட்டுத்துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் விளையாட்டு வீரர்கள் சாய்னா நேவால், பி ஆர் ஸ்ரீஜெஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில் இருந்து தொடங்கிய மாரத்தான் இந்தியா கேட், வரலாற்றுச் சிறப்புமிக்க கடமைப்பாதை ஆகியவை வழியாக சென்று நிறைவடைந்தது. மூத்த குடிமக்களுக்கான சிறப்பு ஓட்டப் போட்டியும், நடைப் போட்டியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

21.1 கி.மீ அரை மாரத்தான் போட்டியின் ஆடவர் பிரிவில் தினேஷ், மகளிர் பிரிவில் ரீமா படேல் ஆகியோர் வெற்றி பெற்றனர். 10 கி.மீ போட்டியின் ஆடவர் பிரிவில் ஆதித்ய தியாகியும், மகளிர் பிரிவில் ராமினி படேலும் வெற்றி பெற்றனர். 5 கி.மீ போட்டியின் ஆடவர் பிரிவில் சந்திரபால் மையாவும், மகளிர் பிரிவில் அஞ்சலியும் வெற்றி பெற்றனர்.      

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2221868&reg=3&lang=1  

***

TV/SMB/RJ/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2222185) வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी