சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய தில்லியில் காற்று தர மேலாண்மை ஆணையம் மாலை நேர ஆய்வு நடவடிக்கையை மேற்கொண்டது

இடுகை இடப்பட்ட நாள்: 01 FEB 2026 6:25PM by PIB Chennai

நகராட்சி திடக்கழிவுகள் / உயிரித் திரவங்களை திறந்தவெளியில் கொட்டுதல் மற்றும் எரிப்பதைத் தடுப்பது தொடர்பான இணக்கத்தை மதிப்பிடுவதற்கும்காற்று மாசுபாட்டின் உள்ளூர் ஆதாரங்களைக் கண்டறிவதற்கும்தேசிய தலைநகர் பகுதி மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் காற்று தர மேலாண்மை ஆணையம் மத்திய தில்லியில் ஒரு மாலை ஆய்வு இயக்கத்தை நடத்தியது. கரோல் பாக் மற்றும் ராஜீந்தர் நகர் பகுதிகளில் ஆணையத்தின் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

ஒருங்கிணைந்த ஆய்வு அறிக்கைகளின்படி, 20 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டன. இதில் இரண்டு உயிரி/திடக்கழிவு எரிப்பு வழக்குகள், 18 குப்பை கொட்டுதல் வழக்குகள் ஆகியவை அடங்கும். பல இடங்களில் கட்டுமான மற்றும் தகர்த்தல் கழிவுகளுடன் நகராட்சி திடக்கழிவுகள் கலந்திருப்பது கண்டறியப்பட்டது. இது கழிவுகளை எரிப்பதற்கு வழிவகுப்பதுடன், காற்று மாசுபாட்டை அதிகரிக்கக்கூடும்.

நகராட்சி திடக்கழிவுகள் மற்றும் தோட்டக்கலை கழிவுகள் சாலைகள் அல்லது வாகனப் போக்குவரத்துப் பகுதிகளில் சேமிக்கப்படவோ அல்லது கொட்டப்படவோ கூடாது என்பதையும்கழிவுகளை உடனடியாக அகற்றி நியமிக்கப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே அப்புறப்படுத்த வேண்டும் என்பதையும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அங்கீகரிக்கப்படாத குப்பைகளை கொட்டுவதற்கு எதிராக தடை உத்தரவுகளை கண்டிப்பாக அமல்படுத்தவும்இதுபோன்ற நடைமுறைகள் மீண்டும் நிகழாமல் தடுக்கவும்மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கவும்குவிந்த கழிவுகளை உடனடியாக அகற்றுவதை உறுதி செய்யவும் தில்லி மாநகராட்சிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2221763&reg=3&lang=1

***

PKV/BR/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2221917) வருகையாளர் எண்ணிக்கை : 18
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी