இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
விளையாட்டு உபகரண உற்பத்தி மேம்பாட்டிற்காக ரூ. 500 கோடி ஒதுக்கீடு
இடுகை இடப்பட்ட நாள்:
01 FEB 2026 5:09PM by PIB Chennai
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்திற்கு 2026-27 நிதியாண்டிற்கு 4,479.88 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது 2025-26 நிதியாண்டின் திருத்தப்பட்ட மதிப்பீட்டை விட 1,133 கோடி ரூபாய் அதிகமாகும்.
திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் முக்கிய பங்கு வகிக்கும் விளையாட்டுத் துறையை அடுத்த பத்தாண்டுகளில் மேலும் மேம்படுத்த கேலோ இந்தியா இயக்கம் தொடங்கப்படும் என்று மத்திய பட்ஜெட் 2026-2027-ல் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விளையாட்டு உபகரணங்கள் உற்பத்திக்கு உத்வேகம் அளித்து, இதில் ஆராய்ச்சி மற்றும் புதுமையை மேம்படுத்தும் விதமான புதிய முன்னெடுப்பும் பட்ஜெட்டில் முன்மொழியப்பட்டுள்ளது. விளையாட்டு உபகரணங்கள் உற்பத்திக்கு 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பயிற்சி மையங்கள் மூலம் திறன் மேம்பாடு, பயிற்சியாளர்கள் மற்றும் உதவி பணியாளர்களின் முன்னேற்றம், விளையாட்டு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் ஒருங்கிணைப்பு, விளையாட்டு கலாச்சாரத்தை ஊக்குவிக்க போட்டிகள் மற்றும் போட்டித்தொடர்கள், மற்றும் பயிற்சி மற்றும் போட்டிகளுக்கான விளையாட்டு உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் ஆகியவற்றில் கேலோ இந்தியா இயக்கம் கவனம் செலுத்தும்.
மேலும் விவரங்களுக்கு இந்தச் செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2221706®=3&lang=1
***
SG/PD/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2221897)
வருகையாளர் எண்ணிக்கை : 24