குடியரசுத் தலைவர் செயலகம்
ஒடிசா, சத்தீஸ்கர் மாநிலங்களுக்கு நாளைமுதல் பிப்ரவரி 7-ம் தேதி வரை குடியரசுத் தலைவர் பயணம் மேற்கொள்கிறார்
இடுகை இடப்பட்ட நாள்:
01 FEB 2026 6:51PM by PIB Chennai
இந்தியக் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு நாளை ( 2026 பிப்ரவரி 02) முதல் பிப்ரவரி 07-ம் தேதி வரை ஒடிசா, சத்தீஸ்கர் மாநிலங்களுக்குப் பயணம் மேற்கொள்கிறார். அவர் நாளை (பிப்ரவரி 2, 2026) மாலை புவனேஸ்வர் சென்றடைகிறார்.
2026 பிப்ரவரி 03 அன்று, பாலசோரில் உள்ள ஃபகிர் மோகன் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று, அங்கு புதிதாகக் கட்டப்பட்ட அரங்கத்தை குடியரசுத் தலைவர் திறந்து வைக்கிறார்.
பிப்ரவரி 04 அன்று, ராய்ரங்பூரில் உள்ள மஹுல்திஹா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பானிஜ்பீர் சுனாராம் சோரனின் சிலையைத் திறந்து வைத்து, மாணவர்களுடன் குடியரசுத் தலைவர் கலந்துரையாடவுள்ளார். ராய்ரங்பூரில் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை, ஒடிசா வேளாண் தொழில்நுட்ப் பல்கலைக்கழகத்தில் புதிய வளாகம், வில்வித்தை மையம், நகர வடிகால் மேம்பாட்டுத் திட்டங்கள், பல்வேறு பெருநிறுவன சமூகப் பொறுப்புத் திட்டங்கள் மற்றும் மகாராஜா ஸ்ரீராம் சந்திர பஞ்சா தியோ பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்ப வளாகம் போன்ற பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்துப் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டவுள்ளார்.
பிப்ரவரி 06 அன்று, குடியரசுத் தலைவர், சிம்லிபாலில் பழங்குடியின சமூகங்களைச் சேர்ந்த பெண்களுடனும் இளைஞர்களுடனும் கலந்துரையாடவுள்ளார். அன்றைய தினம் புவனேஸ்வரில் குளோபல் ஃபைனான்ஸ் அண்ட் டெக்னாலஜி நெட்வொர்க் என்ற அமைப்புடன் இணைந்து ஒடிசா அரசு ஏற்பாடு செய்துள்ள 'பிளாக் ஸ்வான்’ என்ற பெயரிலான நிதித் தொழில்நுட்பம் தொடர்பான உச்சி மாநாட்டில் குடியரசுத் தலைவர் பங்கேற்கிறார்.
பிப்ரவரி 07 அன்று, சத்தீஸ்கர் செல்லும் குடியரசுத் தலைவர் திருமதி திரெளபதி முர்மு, ஜகதல்பூரில் 'பஸ்தர் பண்டும் 2026' என்ற மாநில அளவிலான பழங்குடியினத் திருவிழாவைத் தொடங்கி வைக்கவுள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2221787®=3&lang=1
****
(Release ID: 2221787)
VJ/PKV/PLM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2221891)
வருகையாளர் எண்ணிக்கை : 65