மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
கடலோர மீன்வளத்தை வலுப்படுத்த 500நீர்த்தேக்கங்களையும் அமிர்த நீர் நிலைகலையும் மேம்படுத்த மத்திய பட்ஜெட்டில் முன்மொழிவுகள்
प्रविष्टि तिथि:
01 FEB 2026 3:12PM by PIB Chennai
மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்த 2026-27-ம் ஆண்டிற்கான பட்ஜெட்டில், மீன்வளத்துறைக்கு இதுவரை இல்லாத அளவாக ரூ. 2,761.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்துறையின் வளர்ச்சி மற்றும் மீனவர்களின் நலனை மையமாக வைத்து, சுமார் ரூ. 2,530 கோடி பல்வேறு திட்டங்களுக்காகப் பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பிரதமரின் மீன்வளச் செல்வத் திட்டத்திற்கு மட்டும் ரூ. 2,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மீன்வளத்தை ஊக்குவிக்கும் நோக்கில், 500 நீர்த்தேக்கங்கள் மற்றும் அமிர்த நீர் நிலைகளை ஒருங்கிணைந்த முறையில் மேம்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் மீன் உற்பத்தியை அதிகரிப்பதுடன், மீன் உற்பத்தியாளர் அமைப்புகள், புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் பெண்கள் தலைமையிலான குழுக்களை ஒன்றிணைத்து சந்தை வாய்ப்புகள் உருவாக்கப்படும். மேலும், 34 உற்பத்தியுடன் கூடிய பதனப்படுத்தும் மையங்கள் மூலம் மீன்வள விநியோகச் சங்கிலி வலுப்படுத்தப்படும்.
கடலோரப் பகுதிகளில் மீன்வளத்தை மேம்படுத்துவதன் மூலம் சுமார் 50 லட்சம் மக்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்றுமதியை ஊக்குவிக்க, இந்தியக் கப்பல்கள் ஆழ்கடலில் பிடிக்கும் மீன்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படும் என்றும், கடல் உணவுப் பதனப்படுத்தலுக்குத் தேவையான இறக்குமதி பொருட்களுக்கான வரி விலக்கு வரம்பு 3 சதவீதமாக உயர்த்தப்படும் என்றும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவின் மீன் உற்பத்தி 106 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளதாக பட்ஜெட்டில் நிதியமைச்சர் தெரிவித்தார். மத்திய அரசின் இந்த நடவடிக்கைகள் உலகளாவிய சந்தையில் இந்தியக் கடல் உணவுகளின் போட்டித் திறனை அதிகரித்து, அதிக அந்நியச் செலாவணியைப் பெற்றுத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2221582®=3&lang=1
**
VJ/PKV/VK/SE/SH
(रिलीज़ आईडी: 2221870)
आगंतुक पटल : 7