பாதுகாப்பு அமைச்சகம்
பாதுகாப்புத் துறைக்கான அதிக நிதி ஒதுக்கீடு பாதுகாப்புச் சூழலை மேலும் வலுப்படுத்தும்: மத்திய அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்
प्रविष्टि तिथि:
01 FEB 2026 5:22PM by PIB Chennai
2026-27-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கு 7.85 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டதற்காகப் பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் நன்றி தெரிவித்துள்ளார். வரலாற்றுச் சிறப்புமிக்க ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் வெற்றிக்குப் பிறகு வந்துள்ள இந்த பட்ஜெட், நாட்டின் பாதுகாப்புச் சூழலை மேலும் வலுப்படுத்தும் என்று அவர் கூறியுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், இந்த பட்ஜெட் பாதுகாப்புத் துறையில் தற்சார்பை மேம்படுத்தும் என்று தெரிவித்துள்ளார். பாதுகாப்புப் படைகளுக்கான கொள்முதலுக்காக 1.85 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், இது 2025-26-ம் நிதியாண்டிற்கான ஒதுக்கீட்டை விட சுமார் 24% அதிகம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இது இந்தியாவின் ராணுவத் திறன்களை மேலும் மேம்படுத்தும் எனவும் ஆயுதப் படைகளின் நவீனமயமாக்கல் இந்த பட்ஜெட்டின் மற்றொரு முக்கிய அம்சமாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.
முன்னாள் ராணுவ வீரர்கள், அவர்களது குடும்பத்தினரின் நலனுக்காக கடந்த நிதியாண்டை விட 45.49% அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின் கீழ் தயாரிக்கப்பட்ட ஒரு சிறந்த பட்ஜெட்டை வழங்கியதற்காக நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமனுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2221716®=3&lang=1
***
VJ/PKV/PLM/KR
(रिलीज़ आईडी: 2221864)
आगंतुक पटल : 10