விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

விவசாயிகள், இளையோர், பெண்கள் மற்றும் ஏழை மக்களின் வாழ்வாதாரத்தில் மத்திய பட்ஜெட் மாற்றத்தை ஏற்படுத்தும் – மத்திய அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சௌகான்

प्रविष्टि तिथि: 01 FEB 2026 6:55PM by PIB Chennai

2026 – 27-ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் முன்னெப்போதும் இல்லாத, வரலாற்று சிறப்புமிக்க பட்ஜெட் என்று விவரித்துள்ள மத்திய ஊரக மேம்பாடு, வேளாண் மற்றும் விவசாய நலத்துறை அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சௌகான், பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையின் கீழ் வளர்ச்சியடைந்த மற்றும் தற்சார்பு இந்தியாவுக்கான வலுவான அடித்தளமாக இது உள்ளது என்று கூறியுள்ளார். பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் 12-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளதும், முதலாவது பெண் நிதியமைச்சர் தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்ததும் நாட்டிற்கு பெரும் பெருமையளிக்கக் கூடிய அம்சம் என்று தெரிவித்துள்ளார்.

இந்த பட்ஜெட் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற கனவை உணர்த்தும் காவியம் என்று அவர் கூறியுள்ளார். தேசிய உறுதிப்பாட்டை நிறைவேற்றக்கூடிய மற்றும் சமூக முன்னேற்றதுக்கான பட்ஜெட் இது என்று அவர் தெரிவித்துள்ளார். வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான சக்திமிக்க பட்ஜெட் இது என்றும் அவர் கூறியுள்ளார். பிரதமரின் தொலைநோக்கு பார்வையின் மூலம் 2047-ம் ஆண்டிற்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான, வலிமையான அடித்தளத்தை இந்த பட்ஜெட் அமைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். நாட்டின் நான்கு தூண்களான விவசாயிகள், இளையோர், பெண்கள் மற்றும் ஏழை மக்களின் வாழ்வாதாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவது குறித்து புதிய அத்தியாயத்தை இந்த பட்ஜெட் எழுதியுள்ளதாக திரு சௌகான் தெரிவித்துள்ளார்.

விவசாயிகளின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டை கருத்தில் கொண்டு வேளாண்மைத் துறைக்கு ரூ 1.32 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்தச் செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2221794&reg=3&lang=1

***

SG/PKV/IR/RK/SH


(रिलीज़ आईडी: 2221847) आगंतुक पटल : 17
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Gujarati