ரசாயனம் மற்றும் பெட்ரோ கெமிக்கல் துறை
நாட்டில் மூன்று புதிய ரசாயனப் பூங்காக்கள் அமைக்கப்படும் – மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
01 FEB 2026 4:45PM by PIB Chennai
மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட 2026-2027-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், உடனடியாகத் தொழில் தொடங்கும் மாதிரித் திட்டத்தின் மூலம் நாட்டில் மூன்று புதிய பிரத்யேக ரசாயனப் பூங்காக்கள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தமது பட்ஜெட் உரையில், இந்த பூங்காக்கள் உள்நாட்டு ரசாயன உற்பத்தியை மேம்படுத்தி, இறக்குமதியைக் குறைக்கும் என்று கூறினார். இந்த பிரத்யேக ரசாயனப் பூங்காக்களை நிறுவுவதில் மாநிலங்களுக்கு ஆதரவளிக்க ஒரு செயல் முறை உருவாக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
ரசாயனம் உட்பட ஐந்து தொழில்துறைகளில் கார்பன் உமிழ்வைக் கட்டுப்படுத்தும் புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, அதற்கென நிதி உதவி வழங்கப்படும். இந்த நிதி உதவிக்கான பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள மற்ற துறைகள் மின்சாரம், எஃகு, சிமெண்ட், சுத்திகரிப்பு நிலையங்கள் ஆகியவையாகும். இதற்காக அடுத்த ஐந்து ஆண்டுகளில் 20,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
2026-27-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், 200 பாரம்பரிய தொழில்துறைப் பகுதிகளைப் புத்துயிர் பெறச் செய்வதற்கான ஒரு திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது. உள்கட்டமைப்பு மேம்பாடு, தொழில்நுட்ப மேம்பாடு ஆகியவற்றின் மூலம் அவற்றின் போட்டித்திறனையும் செயல்திறனையும் மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும். இந்த அறிவிப்பு ரசாயனங்கள், பெட்ரோ கெமிக்கல் துறைக்கும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2221676®=3&lang=1
******
VJ/PKV/PLM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2221828)
வருகையாளர் எண்ணிக்கை : 18