பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய பட்ஜெட்டில் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்ச நிதியாக 7.85 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு

प्रविष्टि तिथि: 01 FEB 2026 3:42PM by PIB Chennai

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு தாக்கல் செய்யப்பட்டுள்ள 2026-27 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில், பாதுகாப்பு அமைச்சகத்திற்கு இதுவரை இல்லாத அளவில் அதிகபட்ச நிதியாக 7.85 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது 2025-26 நிதியாண்டின பட்ஜெட் மதிப்பீடுகளை விட 15 சதவீதம் அதிகமாகும். இந்த ஒதுக்கீடு வரும் நிதியாண்டிற்கு மதிப்பிடப்பட்டுள்ள மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீதமாகும். பாதுகாப்பு அமைச்சகத்திற்கான மொத்த ஒதுக்கீடானது (7.85 லட்சம் கோடி ரூபாய்) மத்திய அரசின் செலவினத்தில் 14.67 சதவீதமாகும். மேலும், மத்திய அமைச்சகங்களில் அதிக நிதி ஒதுக்கீடு பாதுகாப்பு அமைச்சகத்திற்கு செய்யப்பட்டுள்ளது. இதில் 27.95 சதவீத நிதி மூலதன செலவினத்திற்கும், 20.17 சதவீத நிதி செயல்பாட்டு தயார்நிலைக்கான செலவினத்திற்கும், 26.40 சதவீதம் ஊதியம் மற்றும் படிகளுக்கான வருவாய் செலவினத்திற்கும், 21.84 சதவீதம் ஓய்வூதியத்திற்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2026-27 நிதியாண்டிற்கு, பாதுகாப்பு படைகளுக்கான மூலதன நிதியாக 2,19,306.47 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது 2025-26 பட்ஜெட் மதிப்பீட்டைக் காட்டிலும் 21.84 சதவீதம் அதிகமாகும். இதில்  1.85 லட்சம் கோடி ரூபாய் மூலதன கொள்முதலுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மூலதன கொள்முதலின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ள திட்டங்கள் பாதுகாப்பு படைகளை அடுத்த தலைமுறை போர் விமானங்கள், கப்பல்கள், டிரோன்கள் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள் மூலம் மேம்படுத்த உதவும். தற்சார்பு இந்தியா கொள்கைக்கு ஊக்கம் அளிக்கும் வகையில், பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த தனியார் நிறுவனங்கள் உட்பட உள்நாட்டு நிறுவனங்களுக்கு 1.39 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2026-27 மத்திய பட்ஜெட்டில் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு 7.85 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதற்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார். தற்சார்பு மற்றும் வளர்ச்சியடைந்த இந்தியா குறித்த பிரதமர் திரு நரேந்திர  மோடியின் தொலைநோக்குப் பார்வையை மேலும் வலுப்படுத்தும் விதமாக 2026-27 மத்திய பட்ஜெட் உள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்தச் செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2221612&reg=3&lang=1

***

SG/PD/SH


(रिलीज़ आईडी: 2221814) आगंतुक पटल : 14
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी