பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆதம்பூர் விமான நிலையத்திற்கு ஸ்ரீ குரு ரவிதாஸ் மகராஜ் ஜி விமான நிலையம் என பெயர் மாற்றம் செய்திருப்பது ஸ்ரீ குரு ரவிதாஸ் மகராஜ் அவர்களின் காலத்தால் அழியாத தத்துவத்திற்கு பொருத்தமான மரியாதையாகும்: பிரதமர்

இடுகை இடப்பட்ட நாள்: 01 FEB 2026 6:21PM by PIB Chennai

துறவி ரவிதாஸ் பிறந்த நாளான இன்றைய புனித தருணத்தில், ஆதம்பூர் விமான நிலையம் ஸ்ரீ குரு ரவிதாஸ் மகராஜ் ஜி விமான நிலையம் என்று இன்று முதல் அழைக்கப்படும் என முடிவு செய்யப்பட்டிருப்பது மிக உயர்ந்த கவுரவத்திற்கும், பெருமிதத்திற்கும் உரியதாகும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.  இது ஸ்ரீ குரு ரவிதாஸ் மகராஜ் அவர்களின் காலத்தால் அழியாத தத்துவத்திற்கு பொருத்தமான மரியாதையாகும். சமத்துவம், கருணை, சேவை என்ற அவரது சிந்தனை நம் அனைவருக்கும் மகத்தான ஊக்குவிப்பாக இருக்கும் என்றும் திரு மோடி கூறியுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:

“துறவி ரவிதாஸ் பிறந்தநாளான இன்றைய புனித தருணத்தில், ஆதம்பூர் விமான நிலையம் ஸ்ரீ குரு ரவிதாஸ் மகாராஜ் ஜி விமான நிலையம் என்று இன்று முதல்  அழைக்கப்படும் என முடிவு செய்யப்பட்டிருப்பது, மிகவுயர்ந்த கௌரவத்திற்கும் பெருமிதத்திற்கும்  உரியதாகும். இந்த நாள் எண்ணற்ற மக்களுக்கு மகிழ்ச்சியான நாளாகும். ஸ்ரீ குரு ரவிதாஸ் மகாராஜ் அவர்களின் காலத்தால் அழியாத தத்துவத்திற்கு இது மிகவும் பொருத்தமான மரியாதையாகும். சமத்துவம், கருணை, சேவை என்ற அவரது சிந்தனை நம் அனைவருக்கும் மகத்தான ஊக்குவிப்பாக இருக்கும்.”

**

(Release ID: 2221761)

VJ/PKV/SMB/RJ/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2221808) வருகையாளர் எண்ணிக்கை : 49