சுற்றுலா அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பாரத் பார்வ் விழாவை பிரேசிலைச் சேர்ந்தவர் பார்வையிட்டு இந்தியக் கலாச்சாரத்தைப் பாராட்டினார்

प्रविष्टि तिथि: 31 JAN 2026 1:49PM by PIB Chennai

வரலாற்று சிறப்புமிக்க செங்கோட்டையில் நடைபெற்ற பாரத் பர்வ் விழாவில், ராஞ்சியில் உள்ள ஹோட்டல் மேலாண்மை நிறுவனத்தின் (ஐஹெச்எம்) அரங்கம் சர்வதேச கலாச்சார பரிமாற்றத்தின் துடிப்பான அம்சமாக அமைந்தது. பிரேசிலிய நாட்டவர் ஒருவர் ஜார்க்கண்டின் வளமான சமையல், கலாச்சார பாரம்பரியத்தில் மிகுந்த ஆர்வம் காட்டினார்.

ராஞ்சி ஐஹெச்எம் மாணவர்கள் அந்த பிரேசிலிய விருந்தினரை அன்புடன் வரவேற்று, ஜார்க்கண்டி உணவு வகைகள், பாரம்பரிய உணவுகள், பழங்காலப் பொருட்கள், மாநிலத்தின் துடிப்பான கலாச்சார மரபுகள் குறித்து விளக்கினர். இந்தியாவின் பன்முகத்தன்மை கொண்ட கலாச்சாரங்கள், உணவு வகைகள், மரபுகளை ஒரே குடையின் கீழ் ஒன்றிணைத்து, வேற்றுமையில் ஒற்றுமையையும், உலகளாவிய கலாச்சார பரிமாற்றத்தையும் ஊக்குவிக்கும் ஒரு தேசிய தளமாக பாரத் பர்வ் திகழ்கிறது என அந்த மாணவர்கள் கூறினர்.

மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோரின் விருந்தோம்பலை பிரேசிலிய விருந்தினர் பாராட்டினார். ஜார்க்கண்ட் உணவு வகைகளின் எளிமை, நிலைத்தன்மை, கலாச்சார வலிமையை அவர் புகழ்ந்தார். இது கலாச்சாரப் பரிமாற்றத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்தது. இந்தியாவின் கலாச்சார செழுமையை உலகளாவிய பார்வையாளர்களுக்கு கொண்டு செல்லும் பாரத் பர்வின் நோக்கத்தை வலுப்படுத்துவதாகவும் இது அமைந்தது. 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2221179&reg=3&lang=1

***

TV/PLM/RK


(रिलीज़ आईडी: 2221317) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी