சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
மத்திய சிறுபான்மையினர் நல அமைச்சகம், உமீத் இணையதளத்தில் கணக்கெடுப்பு மற்றும் வக்ஃப் சொத்து குத்தகை என இரண்டு கூடுதல் தொகுதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது
प्रविष्टि तिथि:
31 JAN 2026 1:13PM by PIB Chennai
ஒருங்கிணைந்த வக்ஃப் மேலாண்மை, அதிகாரம் அளித்தல், செயல்திறன் மற்றும் மேம்பாடு என்ற உமீத் இணையதளம் மூலம், வக்ஃப் வாரிய சொத்துக்களின் நிர்வாகத்தை வெளிப்படைதன்மை, நட்புறவு, பொறுப்புணர்வுடன் கூடிய வகையில் மாற்றத்தைக் கொண்டு வரும் தொடர் முயற்சிகளின் ஒரு பகுதியாக, மத்திய சிறுபான்மையினர் நல அமைச்சகம் ஜனவரி 30, 2026 அன்று இரண்டு கூடுதல் தொகுதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அவை கணக்கெடுப்பு தொகுதி மற்றும் வக்ஃப் சொத்து குத்தகை தொகுதி ஆகும்.
இந்த புதிய தொகுதிகளை, மத்திய சிறுபான்மையினர் நல அமைச்சகத்தின் செயலாளர் டாக்டர் சந்திர சேகர் குமார், அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் முன்னிலையில் தொடங்கி வைத்தார்.
கணக்கெடுப்பு தொகுதியில், வக்ஃப் சொத்துக்களின் கணக்கெடுப்பு தொடர்பான தகவல்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதற்கும், நிர்வகிப்பதற்கும், புதுப்பிப்பதற்கும் ஒரு விரிவான டிஜிட்டல் கட்டமைப்பை வழங்குகிறது.
வக்ஃப் வாரிய சொத்து குத்தகை மேலாண்மை தொகுதியில், இணையதளம் வாயிலாக வக்ஃப் வாரிய சொத்துக்களின் குத்தகை தொடர்பான தகவல்களின் முழுமையான நிர்வாகத்தை எளிதாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில், குத்தகை தொடர்பானத் தரவுகள், குத்தகை காலம், குத்தகைத் தொகை மற்றும் பிற தொடர்புடைய விவரங்கள் போன்ற முக்கிய விவரங்களை ஒரு கட்டமைக்கப்பட்ட மற்றும் வெளிப்படையான முறையில் முறையாகப் பதிவு செய்வதையும், கண்காணிப்பதையும் செயல்படுத்துகிறது. இதன் மூலம், வக்ஃப் வாரிய சொத்துக்களைக் குத்தகைக்கு விடுவதில் பொறுப்புணர்வும், கண்காணிப்பும் வலுப்படுத்தப்படுகிறது.
இந்த இரண்டு இணையதளத் தொகுதிகளின் அறிமுகம், வக்ஃப் வாரிய சொத்துக்களின் நிர்வாகத்தில் செயல்திறன், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை மேம்படுத்த, டிஜிட்டல் நிர்வாகத்திற்கான கருவிகளைப் பயன்படுத்துவதற்கான மத்திய அமைச்சகத்தின் தொடர் முயற்சிகளைப் பிரதிபலிப்பதாக உள்ளது.
இந்தத் தொகுதிகளை பரவலாகச் செயல்படுத்துவதை உறுதிசெய்யுமாறும், தகுதியுள்ள பயனாளிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துமாறும் அனைத்து மாநில/யூனியன் பிரதேச வக்ஃப் வாரியங்களையும் டாக்டர் சந்திர சேகர் குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.
மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு ஜூன் 6, 2025 அன்று தொடங்கி வைத்த உமீத் இணையதளம், ஒருங்கிணைந்த வக்ஃப் மேலாண்மை, அதிகாரம் அளித்தல், செயல்திறன் மற்றும் மேம்பாட்டுச் சட்டம், 1995-ன் கீழ், வக்ஃப் வாரிய சொத்துக்களை உடனுக்குடன் பதிவேற்றம் செய்தல், சரிபார்த்தல் மற்றும் கண்காணிப்பதற்கான ஒரு மையப்படுத்தப்பட்ட டிஜிட்டல் தளமாகச் செயல்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2221166®=3&lang=1
***
TV/SV/RK
(रिलीज़ आईडी: 2221314)
आगंतुक पटल : 9