மக்களவை செயலகம்
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் உருவப்படத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மலரஞ்சலி
இடுகை இடப்பட்ட நாள்:
23 JAN 2026 2:16PM by PIB Chennai
நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்தநாளையொட்டி, மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு மல்லிகார்ஜுன் கார்கே, நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் இதர பிரமுகர்கள் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் உள்ள அவரது திருவுருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினர்.
மக்களவை பொதுச் செயலாளர் திரு உத்பல் குமார் சிங், மாநிலங்களவை பொதுச் செயலாளர் திரு பி சி மோடி ஆகியோரும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸுக்கு அஞ்சலி செலுத்தினர்.
மக்களவைச் செயலகத்தால் இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் வெளியிடப்பட்ட நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் சிற்றேடு ஒன்று பிரமுகர்களுக்கு வழங்கப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2220761®=3&lang=1
(Release ID: 2220761)
****
TV/SV/KPG/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2221009)
வருகையாளர் எண்ணிக்கை : 44