பாதுகாப்பு அமைச்சகம்
குடியரசு தின அணிவகுப்பில் சிறப்பாக செயல்பட்ட அணி பிரிவுக்கும் அலங்கார ஊர்திகளுக்கும் பாதுகாப்புத்துறை இணையமைச்சர் விருதுகள் வழங்கினார்
प्रविष्टि तिथि:
30 JAN 2026 4:58PM by PIB Chennai
வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான இலக்குகளை அடைவதற்கான நாட்டின் உறுதியான நிலைப்பாட்டை எடுத்துரைக்கும் வகையில் குடியரசு தின அணிவகுப்பு நடைபெற்றது. புதுதில்லியில் உள்ள கடமைப்பாதையில் நடைபெற்ற இந்த அணி வகுப்பில் சிறப்பாக அணிவகுத்து வந்த படைப்பிரிவினருக்கும் சிறந்த அலங்கார ஊர்திக்கும் பாதுகாப்புத்துறை இணையமைச்சர் திரு சஞ்சய் சேத் விருதுகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்த அணிவகுப்பின் போது சிறப்பாக செயல்பட்டு விருதுகளை வென்றுள்ளவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான இலக்குகளை எட்ட வேண்டும் என்று இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டை இந்த குடியரசுதின அணிவகுப்பு அமைந்திருந்தாக அவர் பெருமிதம் தெரிவித்தார்.
தேசிய மாணவர் படையினர் வாரந்தோறும் ஒரு மணி நேரமாவது தூய்மைக் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். இந்த அணி வகுப்பில் இடம் பெற்ற படைப்பிரிவுகள் மற்றும் அலங்கார ஊர்திகளின் செயல்திறனை மதிப்பீடு செய்வதற்காக அமைக்கப்பட்ட 3 நீதிபதிகள் அடங்கிய குழுக்கள் சிறந்த படைப்பிரிவுகள் மற்றும் அலங்கார ஊர்திகளை தெரிவு செய்தன. இதன்படி, முப்படைகளின் வகுப்பிலும் சிறந்த அணிவகுப்புப் படைப்பிரிவாக இந்திய கடற்படை தேர்ந்தெடுக்கப்பட்டது. வந்தே மாதரம் – தேசத்தின் ஆன்மாவின் குரல் என்ற கருப்பொருளுடன் வடிவமைக்கப்பட்டிருந்த மத்திய கலாச்சார அமைச்சகத்தின் அலங்கார ஊர்திக்கு விருது வழங்கப்பட்டது. இதே போன்று இந்த அமைச்சகத்தின் நடனக்குழுவிற்கு சிறப்புப் பரிவு வழங்கப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2220887®=3&lang=1
****
TV/SV/KPG/SH
(रिलीज़ आईडी: 2220993)
आगंतुक पटल : 12