பிரதமர் அலுவலகம்
பொருளாதார ஆய்வறிக்கை இந்திய சீர்திருத்த எக்ஸ்பிரஸின் விரிவான படமாக உள்ளது என்றும் சவாலான உலகச் சூழலில் சீரான வளர்ச்சியைப் பிரதிபலிக்கிறது என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்
प्रविष्टि तिथि:
29 JAN 2026 7:43PM by PIB Chennai
நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கை இந்திய சீர்திருத்த எக்ஸ்பிரஸின் விரிவான படமாக உள்ளது என்றும் சவாலான உலகச் சூழலில் சீரான வளர்ச்சியைப் பிரதிபலிக்கிறது என்றும் பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
வலுவான பெருநிலை பொருளாதார அடித்தளங்கள், நீடித்த வளர்ச்சி, தேசக் கட்டுமானத்தில் புத்தாக்கம், தொழில்முனைவு, உள்கட்டமைப்பு ஆகியவற்றின் விரிவாக்கம், இந்தப் பொருளாதார ஆய்வறிக்கையில் இடம் பெற்றுள்ளதாக திரு மோடி குறிப்பிட்டுள்ளார். விவசாயிகள், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், வேலைவாய்ப்பு, சமூக நலன் ஆகியவற்றில் கவனம் செலுத்தி அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பதன் முக்கியத்துவத்தை இந்த ஆய்வறிக்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. வளர்ச்சியடைந்த இந்தியாவாக மாறுவதை நோக்கிய நமது பயணத்தை வேகப்படுத்துதல், பொருள் உற்பத்தி வலுப்படுத்துதல், உற்பத்தித் திறனை விரிவாக்குதல் ஆகியவற்றுக்கான வழி வகைகளையும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது என்று திரு மோடி கூறியுள்ளார்.
மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமனின் சமூக ஊடக எக்ஸ் தளப் பதிவிற்கு பதிலளித்து திரு மோடி கூறியிருப்பதாவது:
“இன்று தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கை இந்திய சீர்திருத்த எக்ஸ்பிரஸின் விரிவான படமாக உள்ளது. சவாலான உலகச் சூழலில் சீரான வளர்ச்சியைப் பிரதிபலிக்கிறது.
வலுவான பெருநிலை பொருளாதார அடித்தளங்கள், நீடித்த வளர்ச்சி, தேசக் கட்டுமானத்தில் புத்தாக்கம், தொழில்முனைவு, உள்கட்டமைப்பு ஆகியவற்றின் விரிவாக்கம் இந்தப் பொருளாதார ஆய்வறிக்கையில் இடம் பெற்றுள்ளது. விவசாயிகள், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், வேலைவாய்ப்பு, சமூக நலன் ஆகியவற்றில் கவனம் செலுத்தி அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பதன் முக்கியத்துவத்தை இந்த ஆய்வறிக்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. வளர்ச்சியடைந்த இந்தியாவாக மாறுவதை நோக்கிய நமது பயணத்தை வேகப்படுத்துதல், பொருள் உற்பத்தி வலுப்படுத்துதல், உற்பத்தித் திறனை விரிவாக்குதல் ஆகியவற்றுக்கான வழி வகைகளையும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
இதன் மீது தெரிவிக்கப்படும் தெளிவான கருத்துகள் கொள்கை உருவாக்கத்திற்கு வழிகாட்டும். இந்தியாவின் பொருளாதார எதிர்காலத்தில் நம்பிக்கையை ஏற்படுத்தும்.”
***
(Release ID: 2220442)
TV/SMB/RJ/EA
(रिलीज़ आईडी: 2220563)
आगंतुक पटल : 11