வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
சர்வதேச அளவில் சிறந்த நடைமுறைகளுக்கு ஏற்ப வடிவமைப்புச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் - மத்திய வர்த்தக அமைச்சகம்
प्रविष्टि तिथि:
29 JAN 2026 12:31PM by PIB Chennai
சர்வதேச அளவில் சிறந்த நடைமுறைகளுக்கு ஏற்ப வடிவமைப்புச் சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று மத்திய வர்த்தக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்புத்துறை தெரிவித்துள்ளது. இந்திய வடிவமைப்புத் துறையை நவீனமயமாக்கும் வகையிலும் பாதுகாப்புக் கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையிலும் இத்தகைய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா – ரியாத் வடிவமைப்புச் சட்ட ஒப்பந்தம் மற்றும் தொழில்துறை வடிவமைப்புக்கான சர்வதேச பதிவுகள் தொடர்பான ஒப்பந்தம் ஆகியவற்றில் இணைவதற்கும் இந்த சீர்திருத்த நடவடிக்கைகள் வகை செய்யும். இந்தியாவில் வடிவமைப்பு உலகிற்கான வடிவமைப்பு என்ற தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப இச்சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதுடன் மாறிவரும் சூழலுக்கு ஏற்ப பொருத்தமான விதிமுறைகளை உருவாக்குவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
பொருள் மற்றும் வடிவமைப்பு ஆகியவற்றின் வரைமுறையில் உரிய திருத்தங்களை மேற்கொள்வதன் மூலம் மெய்நிகர் சார்ந்த அம்சங்களில் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் இது உதவிடும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2219951®=3&lang=1
**
TV/SV/KPG/EA
(रिलीज़ आईडी: 2220432)
आगंतुक पटल : 8