மக்களவை செயலகம்
azadi ka amrit mahotsav

அஜித் பவார் மறைவு: மக்களவைச் சபாநாயகர் திரு. ஓம் பிர்லா ஆழ்ந்த இரங்கல்

प्रविष्टि तिथि: 28 JAN 2026 4:54PM by PIB Chennai

மகாராஷ்டிர மாநிலத்தின் துணை முதல்வர் திரு. அஜித் பவார்  மறைவிற்கு மக்களவைச் சபாநாயகர் திரு. ஓம் பிர்லா தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள சமூக வலைப்பதிவில், "மகாராஷ்டிராவின் துணை முதல்வர் திரு. அஜித் பவார் மற்றும் அவரது சகாக்கள் விமான விபத்தில் அகால மரணமடைந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் துயரத்தையும் அளிக்கிறது. திரு. அஜித் பவார் அவர்கள் மகாராஷ்டிராவின் பார்மதி நாடாளுமன்றத் தொகுதியிலிருந்து 10-ஆவது மக்களவை உறுப்பினராகவும் சிறப்பாகப் பணியாற்றியுள்ளார்.

கூட்டுறவுத் துறை, பொது நலன் மற்றும் மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக அவர் ஆற்றிய பணிகள் எப்போதும் நினைவு கூறப்படும். மறைந்த ஆன்மாக்களுக்கு நித்திய அமைதி கிடைக்க இறைவனைப் பிரார்த்திக்கிறேன். இந்தத் துயரத்தைத் தாங்கும் வலிமையை அவர்களது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் இறைவன் வழங்கட்டும். ஓம் சாந்தி."என்று குறிப்பிட்டுள்ளார்.

18-ஆவது மக்களவையின் 7-ஆவது கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று, சபாநாயகர் திரு. ஓம் பிர்லா தலைமையில் திரு. அஜித் பவார் மற்றும் ஏனைய மறைந்த முக்கியப் பிரமுகர்களுக்கு நாடாளுமன்றத்தில் இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2219644&reg=3&lang=2

***

TV/VK/SE


(रिलीज़ आईडी: 2219836) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Gujarati , Telugu