உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய தொழிலக பாதுகாப்புப் படையின் "வந்தே மாதரம்" கடலோர சைக்கிள் பேரணி புதுதில்லியில் தொடங்கி வைக்கப்பட்டது

प्रविष्टि तिथि: 28 JAN 2026 6:08PM by PIB Chennai

மத்திய தொழிலக பாதுகாப்புப் படையின் வந்தே மாதரம் கடலோர சைக்ளத்தான்-2026 புதுதில்லியில் உள்ள மேஜர் தியான்சந்த் தேசிய விளையாட்டு அரங்கில் இருந்து காணொலிக்காட்சி மூலம் மத்திய உள்துறை இணையமைச்சர் திரு நித்யானந்த ராய்  தொடங்கி வைத்தார்.

 

இந்தத் தொடக்க நிகழ்வில் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சக செயலாளர் டாக்டர் பல்லவி ஜெயின் கோவில்இந்தோ - திபெத் எல்லைக் காவல்படை தலைமை இயக்குநர் திரு சத்ருஜீத் கபூர்மத்திய தொழிலக பாதுகாப்புப் படை தலைமை இயக்குநர் திரு பிரவீர் ரஞ்சன்தேசிய புலனாய்வு முகமை தலைமை இயக்குநர் திரு ராகேஷ் அகர்வால்பிரசார் பாரதியின் தலைமை நிர்வாக அதிகாரி திரு கௌரவ் திவிவேதிசகஸ்த்ர சீமா பால் படையின் தலைமை இயக்குநர் திரு சஞ்சய் சிங்கால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

  

மிதிவண்டி பயணத்தில் பங்கேற்றிருப்போருக்கு தங்களின் ஆதரவைத் தெரிவிக்கும் விதமாக இந்தியா கேட் அருகே சிறப்பு விருந்தினர்கள் மிதிவண்டிப் பயணத்தில் பங்கேற்றனர். 

நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் நித்யானந்த் ராய்வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டினை நினைவுகூரும் வகையில் இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தப் பாடல்இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்திற்கு ஊக்கமளிப்பதாக இருந்தது என்றும்தேச சேவை உணர்வில் பல தலைமுறைகளுக்கு இதன் வழிகாட்டுதல் தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

25 நாட்கள் நடைபெறவுள்ள இந்த மாபெரும் தேசிய நிகழ்வு மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் இரண்டு மிதிவண்டி அணிகள் ஒரே நேரத்தில் மேற்குவங்கத்தின் பகாலியில் இருந்தும்குஜராத்தின் லாக்பத்தில் இருந்தும் பயணத்தைத் தொடங்கியுள்ளன. இந்த அணிகள் சுமார் 6,500 கிலோ மீட்டர் நாட்டின் கிழக்குமேற்கு கடலோரப் பகுதிகளில் உள்ள தமிழ்நாடுபுதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வழியாகப் பயணம் செய்து, 2026 பிப்ரவரி 22 அன்று கொச்சியை சென்றடைகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2219640&reg=6&lang=1

 

***

TV/SMB/RJ/SE


(रिलीज़ आईडी: 2219725) आगंतुक पटल : 11
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Gujarati , Odia , Kannada , Malayalam