சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புதிய மருந்துகள் மற்றும் மருத்துவ ஆய்வு விதிகள் 2019-க்கான முக்கிய திருத்தங்களை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் அறிவித்துள்ளது

प्रविष्टि तिथि: 28 JAN 2026 9:53AM by PIB Chennai

ஒழுங்குமுறை சுமைகளைக் குறைத்து எளிதாக வணிகம் செய்வதை ஊக்கப்படுத்த வேண்டும் என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் அறிவுறுத்தலுக்கு இணங்க, புதிய மருந்துகள் மற்றும் மருத்துவ ஆய்வு விதிகள் 2019-க்கான முக்கிய திருத்தங்களை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் அறிவித்துள்ளது.

நாட்டில் ஒழுங்குமுறை நடைமுறைகளை எளிதாக்குதல், அனுமதி பெறுவதற்கான கால அளவை குறைத்தல், மருத்துவ ஆய்வுகள் நடத்துவதை துரிதப்படுத்துதல், மருந்துகள் துறையை மேம்படுத்துதல் ஆகியவற்றை இந்தத் திருத்தங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளன.

தற்போதுள்ள ஒழுங்குமுறை கட்டமைப்பின் கீழ் மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் சிறிய அளவு மருந்துகள் தயாரிப்பதற்கும் மத்திய மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு அமைப்பிடம் பரிசோதனை உரிமம் பெற வேண்டியுள்ளது. அறிவிக்கப்பட்ட திருத்தங்களின் மூலம் வணிகம் சாராத உற்பத்திக்கான உரிமத் தேவை முன்கூட்டிய தகவல் என்ற நடைமுறை மூலம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக பரிசோதனை உரிமம் பெற வேண்டிய அவசியமில்லை. மாறாக மருந்து தயாரிப்பு குறித்து மத்திய மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு அமைப்புக்கு இணையம் வழியாக தகவல் தெரிவித்தால் போதுமானது.

மருந்துகள் தயாரிப்பில் ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புக்கு குறைந்தபட்சம் 90 நாட்கள் சேமிக்கப்படுவதால் இந்த துறை குறிப்பிடத்தக்க ஊக்கம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பரிசோதனை உரிமங்கள் தேவைப்படும் பிரிவுகளுக்கான காலவரம்பு 90 நாட்களிலிருந்து 45 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.

இந்த சீர்திருத்தங்கள் சுமூகமாகவும், தடையின்றியும் அமலாக்கப்படுவதை உறுதி செய்ய தேசிய ஒற்றைச் சாளர முறையும் "சுகம்" தளமும் செயல்பாட்டில் உள்ளன.       

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2219422&reg=3&lang=1

***

TV/SMB/RJ/KR


(रिलीज़ आईडी: 2219653) आगंतुक पटल : 12
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Malayalam