பிரதமர் அலுவலகம்
திரு அஜித் பவார் மறைவுக்கு பிரதமர் இரங்கல்
प्रविष्टि तिथि:
28 JAN 2026 11:16AM by PIB Chennai
மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் திரு அஜித் பவார் மறைவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மக்களுக்கு சேவையாற்றுவதில் முன்னிலை வகித்தவராகவும், கடின உழைப்பால் பெரிதும் மதிக்கப்பட்டவராகவும் திரு அஜித் பவார் திகழ்ந்தார் என்று திரு மோடி குறிப்பிட்டுள்ளார். நிர்வாக விவகாரங்களில் அவரது புரிந்துணர்வும் ஏழை மற்றும் அடித்தட்டு மக்களுக்கு அதிகாரமளிப்பதில் அவரது ஆர்வமும் குறிப்பிடத்தக்கவை என்று கூறியுள்ளார். அவரது எதிர்பாராத மறைவு மிகவும் அதிர்ச்சியும் கவலையும் அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார். அன்னாரது குடும்பத்தினருக்கும் எண்ணற்ற அவரது ஆதரவாளர்களுக்கும் தமது இரங்கல்களை தெரிவித்துக் கொள்வதாக திரு மோடி கூறியுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
“திரு அஜித் பவார் மக்கள் தலைவராகவும் அடித்தள மக்களுடன் வலிமையான தொடர்பை கொண்டிருந்தவராகவும் திகழ்ந்தார். மகாராஷ்டிரா மக்களுக்கு சேவையாற்றுவதில் முன்னிலை வகித்தவராகவும், கடின உழைப்பால் பெரிதும் மதிக்கப்பட்டார். நிர்வாக விவகாரங்களில் அவரது புரிந்துணர்வும் ஏழை மற்றும் அடித்தட்டு மக்களுக்கு அதிகாரமளிப்பதில் அவரது ஆர்வமும் குறிப்பிடத்தக்கவை. அவரது எதிர்பாராத மறைவு மிகவும் அதிர்ச்சியும் கவலையும் அளிக்கிறது. அன்னாரது குடும்பத்தினருக்கும் எண்ணற்ற அவரது ஆதரவாளர்களுக்கும் இரங்கல்கள். ஓம் சாந்தி”.
**
(Release ID: 2219449)
TV/IR/KPG/KR
(रिलीज़ आईडी: 2219531)
आगंतुक पटल : 12
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam