சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
தொழில்துறைகளுக்கான ஒப்புதல் வழங்குதலை மேலும் முறைப்படுத்த வழிகாட்டு நெறிமுறைகளை அரசு திருத்தியமைத்துள்ளது
प्रविष्टि तिथि:
28 JAN 2026 9:19AM by PIB Chennai
அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள தொழில்துறைகளுக்கான ஒப்புதல் முறையை மேலும் முறைப்படுத்த காற்று (மாசுத் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம் 1981 மற்றும் நீர் (மாசுத் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம் 1974 ஆகியவற்றின் கீழ் வெளியிடப்பட்ட ஒரே மாதிரியான ஒப்புதல் வழிகாட்டு நெறிமுறைகளை அரசு திருத்தியமைத்துள்ளது.
இந்நடவடிக்கை நடைமுறை தாமதங்களைக் குறைக்கவும், சுற்றுச்சூழல் நிர்வாகத்தை வலுப்படுத்தவும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நிறுவுவதற்கான ஒப்புதல், செயல்படுத்துவதற்கான ஒப்புதல் வழங்கல், மறுப்பு தெரிவித்தல் அல்லது ரத்து செய்தல் ஆகியவற்றுக்கான ஒரே மாதிரியான கட்டமைப்பை கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் அளிக்கின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2219415®=3&lang=1
---
TV/IR/KPG/KR
(रिलीज़ आईडी: 2219529)
आगंतुक पटल : 14