சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மேற்கு வங்கத்தில் கடந்த டிசம்பர் முதல் இரண்டு நிபா வைரஸ் பாதிப்புகள் மட்டுமே பதிவு தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் விளக்கம்

प्रविष्टि तिथि: 27 JAN 2026 5:41PM by PIB Chennai

மேற்கு வங்க மாநிலத்தில் நிபா வைரஸ் பாதிப்பு குறித்து ஊடகங்களில் பரவி வரும் தவறான மற்றும் ஊகங்களின் அடிப்படையிலான தகவல்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தின் (என்சிடிசி) அறிக்கையின்படி, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் இன்று வரை மேற்கு வங்கத்தில் இரண்டு நிபா வைரஸ் பாதிப்புகள் மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ளன என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இந்த இரண்டு பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய அரசு மேற்கு வங்க அரசுடன் இணைந்து முறையான பாதுகாப்பு நெறிமுறைகளின்படி உடனடி பொது சுகாதார நடவடிக்கைகளை மேற்கொண்டது. பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 196 நபர்கள் கண்டறியப்பட்டு, அவர்கள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அந்த 196 பேருக்கும் நிபா வைரஸ் அறிகுறிகள் ஏதும் இல்லை என்பதும், அவர்களுக்கு எடுக்கப்பட்ட சோதனையில் வைரஸ் பாதிப்பு இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மத்திய மற்றும் மாநில சுகாதார முகமைகளின் ஒருங்கிணைந்த முயற்சியால், தீவிரக் கண்காணிப்பு மற்றும் கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, நோய் பரவல் சரியான நேரத்தில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை புதிதாக யாருக்கும் நிபா வைரஸ் பாதிப்பு கண்டறியப்படவில்லை. தற்போதைய சூழலை அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. எனவே, பொதுமக்கள் மற்றும் ஊடகங்கள் அதிகாரப்பூர்வமற்ற தகவல்களைப் பரப்புவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், அரசு வெளியிடும் சரிபார்க்கப்பட்ட தகவல்களை மட்டுமே நம்ப வேண்டும் என்றும் மத்திய சுகாதார அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2219219&reg=3&lang=1

***

TV/VK/SE


(रिलीज़ आईडी: 2219352) आगंतुक पटल : 13
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी