புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய குடும்ப வருமானக் கணக்கெடுப்பு மற்றும் பதிவுசெய்யப்பட்ட சேவை நிறுவனங்களின் வருடாந்திரக் கணக்கெடுப்பு குறித்த பயிலரங்கு சென்னையில் நடைபெறுகிறது

प्रविष्टि तिथि: 27 JAN 2026 3:00PM by PIB Chennai

தேசிய குடும்ப வருமானக் கணக்கெடுப்பு மற்றும் பதிவுசெய்யப்பட்ட சேவை நிறுவனங்களின் வருடாந்திரக் கணக்கெடுப்பு குறித்த பயிலரங்கு ஜனவரி 28 மற்றும் 29 ஆம் தேதிகளில் சென்னையில் நடைபெறுகிறது.

மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய புள்ளியியல் அலுவலகம் ஏற்பாடு செய்துள்ள இந்த பயிலரங்கில், துறை சார்ந்த நிபுணர்கள் இதற்கான பயிற்சியை வழங்குகின்றனர். இந்த கணக்கெடுப்பு ஏப்ரல் 2026 முதல் ஒரு வருட காலத்திற்கு நடத்தப்படும்.

அகில இந்திய அளவில் நடைபெறவுள்ள  இந்த கணக்கெடுப்புப் பணிகள், நீண்டகால தரவுகளை சேகரிப்பதில் உள்ள இடைவெளிகளைக் கையாள்வதில் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையைக் குறிக்கும் வகையில் உள்ளன.

நாடு முழுவதிலும் டிஜிட்டல் முறையில் நடைபெறவுள்ள இந்தக் கணக்கெடுப்புப் பணிகளுக்கான  களப்பணிகளைத் தொடங்குவதற்கான   தயார் நிலையை உறுதி செய்வதற்கான ஒரு பயிற்சித் திட்டமாகும்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2219101&reg=3&lang=1

***

TV/IR/KPG/SE


(रिलीज़ आईडी: 2219320) आगंतुक पटल : 38
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Kannada