ஆயுஷ்
77 - வது குடியரசு தின அணிவகுப்பில், ஆயுஷ் அமைச்சகத்தின் அலங்கார ஊர்தி பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது
प्रविष्टि तिथि:
26 JAN 2026 2:03PM by PIB Chennai
புது தில்லியின் கடமைப் பாதையில் நடைபெற்ற 77 - வது குடியரசு தின அணிவகுப்பில், மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் அலங்கார ஊர்தி, அணிவகுத்துச் சென்றது. இது இந்தியப் பாரம்பரிய மருத்துவ முறைகளை நவீன தொழில்நுட்பத்துடன் ஒருங்கிணைத்த விரிவான நடவடிக்கையை எடுத்துக்காட்டுவதாக இருந்தது. மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் தேசிய ஆயுஷ் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள இந்த அலங்கார ஊர்தியின் கருப்பொருள், "ஆயுஷின் தந்திரம், ஆரோக்கியத்தின் மந்திரம்" என்பதாகும். இது தற்சார்பு இந்தியா மற்றும் மக்கள் மையமாகக் கொண்ட வளர்ச்சி என்ற விரிவான தேசிய தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப அமைந்திருந்தது.
இந்த அலங்கார ஊர்தி, ஆரோக்கியம், நல்வாழ்வு குறித்த இந்தியாவின் நாகரிக அணுகுமுறையை பிரதிபலிக்கும் வகையில் இருந்தது. ஆயுர்வேதம், யோகா, இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா, சோவா-ரிக் மற்றும் ஹோமியோபதி போன்ற பாரம்பரிய மருத்துவ அறிவுசார் அமைப்புகள், நோய்த் தடுப்பு, மேம்பாடு மற்றும் சமூகம் அடிப்படையிலான சுகாதாரப் பராமரிப்பை வலுப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிப்பதை இது எடுத்துக்காட்டும் வகையில் அமைந்திருந்தது.
அலங்கார ஊர்தியின் முன்பகுதி, இயற்கையோடு இயைந்த இந்தியாவின் பாரம்பரிய சுகாதார அறிவின் மூலம் ஆயுஷ் மருத்துவ முறைகளை சித்தரித்தரிக்கும் வகையில் உள்ளது. சிற்பங்கள், மருத்துவ குணம் கொண்ட மூலிகைத் தாவரங்கள், மனித ஆரோக்கியத்திற்கும், இயற்கை சூழல் அமைப்புக்கும் இடையேயான நெருங்கிய தொடர்புகளை விளக்குவதாக இருந்தன. இது நீடித்த, முழுமையான வாழ்வியல் முறையை, ஆயுஷ் அமைச்சகத்தின் முக்கியக் கொள்கைகளாக உள்ளது என்பதை வலியுறுத்துவதாக இருந்தன.
மேலும், இந்த அலங்கார ஊர்தி, தேசிய ஆயுஷ் திட்டம் மூலம், தேசிய சுகாதாரக் கட்டமைப்பின் கீழ், ஆயுஷ் முறையாக ஒருங்கிணைக்கப்படுவதை காட்சிப்படுத்தியது. ஆயுஷ்மான் சுகாதார மையம், திறன் மேம்பாடு, கல்வி மற்றும் ஆராய்ச்சி முயற்சிகள் உட்பட, அனைத்து நிலைகளிலும், ஆயுஷ் சேவைகள் விரிவுபடுத்தப்படுவதை இது எடுத்துக்காட்டுவதாக இருந்தன. இவை நாடு முழுவதும் தரமான சுகாதார சேவைகள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் இருந்தன.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2218761®=3&lang=1
***
TV/SV/RK
(रिलीज़ आईडी: 2218789)
आगंतुक पटल : 14