ரெயில்வே அமைச்சகம்
சிறப்பாகப் பணியாற்றிய ஆர்பிஎஃப், ஆர்பிஎஸ்எஃப் பணியாளர்களுக்குக் குடியரசுத் தலைவரின் பதக்கங்கள் அறிவிப்பு
प्रविष्टि तिथि:
25 JAN 2026 2:20PM by PIB Chennai
2026 குடியரசு தினத்ததையொட்டி ரயில்வே பாதுகாப்புப் படை, ரயில்வே பாதுகாப்பு சிறப்புப் படை ஆகியவற்றில் சிறப்பாகப் பணியாற்றிய அதிகாரிகளுக்கும் பணியாளர்களுக்கும், அவர்களின் சிறந்த சிறந்த சேவையைப் பாராட்டி , குடியரசுத் தலைவரின் சிறப்பு சேவைக்கான பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த சேவைக்கான குடியரசுத் தலைவரின் சிறப்புப் பதக்கத்துக்கு தேர்வு செய்யப்பட்டவர்:
* திருமதி அரோமா சிங் தாக்கூர் , தலைமை இயக்குநர், தெற்கு மத்திய ரயில்வே
சிறந்த சேவைக்காக மதிப்புமிக்க பதக்கங்கள் பெறுவோர்:
* தெற்கு மத்திய ரயில்வேயின் உதவி பாதுகாப்பு ஆணையர் திரு உத்தம் குமார் பந்தோபாத்யாய்
* திரு கல்யாண் தியோரி , ரயில்வே பாதுகாப்பு சிறப்புப் படையின் உதவி கமாண்டன்ட்.
* திரு பல்வான் சிங் , ஆய்வாளர், வடக்கு ரயில்வே
* திரு பிரபுல் சந்திர பாண்டா , ஆய்வாளர், கிழக்கு கடலோர ரயில்வே
* திரு பிரகாஷ் சரண் தாஸ் , ஆய்வாளர், கிழக்கு கடலோர ரயில்வே
* திரு முகேஷ் குமார் சோம் , ஆய்வாளர், ரயில்வே பாதுகாப்பு சிறப்புப் படை
* திரு பப்பலா ஸ்ரீனிவாச ராவ் , துணை ஆய்வாளர், கிழக்கு கடலோர ரயில்வே
* திரு அன்வர் ஹுசைன் , துணை ஆய்வாளர், மேற்கு ரயில்வே
* திரு ஸ்ரீனிவாஸ் ரவுலா , துணை ஆய்வாளர், தெற்கு மத்திய ரயில்வே
* திரு ஷிவ் லஹரி மீனா , துணை ஆய்வாளர், ரயில்வே பாதுகாப்பு சிறப்புப் படை
* திரு திக்கல வெங்கட முரளி கிருஷ்ணா , உதவி துணை ஆய்வாளர், கிழக்கு கடற்கரை ரயில்வே
* திரு சஞ்சீவ் குமார் , உதவி துணை ஆய்வாளர், வடக்கு ரயில்வே
* திரு மகேஸ்வர ரெட்டி கர்னாட்டி , தலைமை காவலர், தெற்கு மத்திய ரயில்வே
* திரு சி. ஐயய்யா பாரதி , தலைமைக் காவலர், தெற்கு ரயில்வே
* திரு முகமது ரஃபீக் , கான்ஸ்டபிள்/தோபி, ரயில்வே பாதுகாப்பு சிறப்புப் படை
சிறப்பாகச் சேவை செய்தவர்களுக்கு குடியரசுத் தலைவரின் சிறப்புப் பதக்கம் வழங்கப்படுகிறது. அதே நேரத்தில், சமயோசிதமான தன்மை மற்றும் கடமைக்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றுக்காக மதிப்புமிக்க பதக்கம் வழங்கப்படுகிறது.
ஆர்பிஎஃப், ஆர்பிஎஸ்எஃப் ஆகியவற்றின் பணியாளர்களை கௌரவிப்பதற்கும் ஊக்குவிப்பதற்கும் இந்த விருதுகள் ஆண்டுக்கு இரண்டு முறை, குடியரசு தினம், சுதந்திர தினம் ஆகிய நாட்களில் வழங்கப்படுகின்றன.
***
(Release ID: 2218440)
TV/PLM/RJ
(रिलीज़ आईडी: 2218595)
आगंतुक पटल : 15