வடகிழக்குப் பகுதி வளர்ச்சி அமைச்சகம்
80 கோடி ரூபாய் மதிப்பிலான அகில் மர மதிப்புச் சங்கிலி மேம்பாட்டுத் திட்டத்திற்கு மத்திய அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா அடிக்கல் நாட்டினார்
प्रविष्टि तिथि:
24 JAN 2026 6:45PM by PIB Chennai
மத்திய வடகிழக்கு பிராந்திய வளர்ச்சி மற்றும் தகவல் தொடர்பு துறை அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா, திரிபுரா மற்றும் அசாமுக்கான தனது மூன்று நாள் பயணத்தின் இரண்டாவது நாளில் (24.01.2026), திரிபுராவில் உள்ள வடக்கு ஃபுல்கபாரிக்குச் சென்றார். அங்கு ரூ. 80 கோடி மதிப்பிலான அகில் மர மதிப்புச் சங்கிலி மேம்பாட்டுத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்வில் பேசிய அமைச்சர், இந்தியாவின் அகில் மர உற்பத்தித் திறன் பெரும்பாலும் திரிபுரா மற்றும் அசாமில் குவிந்துள்ளது என்றும், இந்தத் திட்டம் இரு மாநிலங்களின் வலிமைகளிலும் புதிய ஆற்றலை செலுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் திரு சிந்தியா கூறினார். இந்தத் திட்டத்தின் கீழ் இரண்டு மத்திய பதப்படுத்தும் மையங்கள் கோலாகாட் (அசாம்) மற்றும் திரிபுராவின் இந்தப் பகுதியில் நிறுவப்படும் என்று அவர் தெரிவித்தார். இந்த மையங்கள் விரிவான பதப்படுத்துதல், பிராண்டிங் மற்றும் சந்தைப்படுத்தல் ஆகியவற்றை செயல்படுத்தும், இடைத்தரகர்களை நீக்கி, விவசாயிகள் தங்கள் விளைபொருட்களின் முழு மதிப்பையும் பெறுவதை உறுதி செய்யும்.
உலகளவில் அகில் மர துறையைப் போட்டித்தன்மை வாய்ந்ததாக மாற்ற பல முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் கூறினார். புவிசார் குறியீட்டைப் பெறுவதற்கான செயல்முறை நடந்து வருகிறது; ஏற்றுமதி ஒதுக்கீடுகள் ஆறு மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளன; அகில் மர சில்லுகளின் ஏற்றுமதி 25,000 கிலோவிலிருந்து 1.5 லட்சம் கிலோவாக உயர்த்தப்பட்டுள்ளது; அகில் மர எண்ணெய் ஏற்றுமதி 1,500 கிலோவிலிருந்து 7,500 கிலோவாக உயர்த்தப்பட்டுள்ளது; மேலும் விவசாயிகள் சர்வதேச சந்தைகளுடன் நேரடியாக இணைக்கக்கூடிய வகையில் தளங்களும் அனுமதிகளும் டிஜிட்டல் தளத்தில் ஒருங்கிணைக்கப்படுகின்றன.
இடைத்தரகர்களை அகற்றி, முழுப் பலனும் விவசாயிகளை நேரடியாகச் சென்றடைவதை உறுதி செய்வதே நோக்கம் என்று அவர் வலியுறுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2218232®=3&lang=1
‘***
TV/RB/RJ
(रिलीज़ आईडी: 2218518)
आगंतुक पटल : 6