பிரதமர் அலுவலகம்
மனதின் குரல் நிகழ்ச்சியின் 130-வது அத்தியாயத்தில் தமது உரையின் முக்கிய அம்சங்களைப் பி்ரதமர் பகிர்ந்துள்ளார்
प्रविष्टि तिथि:
25 JAN 2026 12:57PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திரமோடி மனதின் குரல் நிகழ்ச்சியின் 130-வது அத்தியாயத்தில் தாம் ஆற்றிய உரையின் ஒரு சில முக்கிய அம்சங்களைப் பகிர்ந்துள்ளார்.
இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவுகளில் கூறியிருப்பதாவது:
"2026-ம் ஆண்டின் முதலாவது மனதின் குரல் அத்தியாயம் தேசிய வாக்காளர் தினத்தன்று ஒலிபரப்பாகிறது. வாக்காளராக மாறுவது கொண்டாட்டத்திற்கான ஒரு தருணமாக இருக்கட்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, வாக்காளராக இருப்பது ஒரு பெரிய பாக்கியமும் பொறுப்பும் ஆகும்."
"2026-ம் ஆண்டை தரத்தைப் பற்றியதாக மாற்றுவோம். 'பூஜ்ஜிய குறைபாடு, பூஜ்ஜிய விளைவு' என்பதில் கவனம் செலுத்துவோம். இந்தியாவில் தயாரிக்கப்பட்டது = சிறப்பானது என்பதை உறுதி செய்வோம்."
"உத்தரப்பிரதேசத்தின் அசம்கர் வழியாகப் பாயும் தாம்சா நதியின் மறுசீரமைப்பு, பொதுமக்கள் பங்கேற்பின் வெற்றிக்கு ஒரு குறிப்பிடத்தக்க எடுத்துக்காட்டு. இங்குள்ள மக்கள் தங்கள் கூட்டு வலிமையால் ஒரு நதிக்கு மட்டுமல்லாமல், நமது கலாச்சார, ஆன்மீக பாரம்பரியத்திற்கும் புத்துயிர் கொடுத்துள்ளனர்."
"நீர்நிலைகளை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளுக்காக ஆந்திரப் பிரதேசத்தின் அனந்தபூர் மக்களை நான் பாராட்டுகிறேன்."
"எங்கள் இளைஞர்கள் பக்தி இசையை நவீனத்துவத்துடன் (பஜன் கிளப்பிங்) இணைக்கின்றனர். இதில் பஜனைகளின் புனிதத்தை மனதில் கொண்டு ஆன்மீகமும் நவீனத்துவமும் அழகாக இணைக்கப்படுகின்றன."
***
(Release ID: 2218424)
TV/PLM/RJ
(रिलीज़ आईडी: 2218460)
आगंतुक पटल : 21
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Assamese
,
Telugu
,
Malayalam
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Gujarati
,
Odia