குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களின் பயனாளிகள் புது தில்லியில் குடியரசு தின அணிவகுப்பைக் காண சிறப்பு விருந்தினர்களாக அழைப்பு

प्रविष्टि तिथि: 24 JAN 2026 4:54PM by PIB Chennai

பிரதமரின் விஸ்வகர்மா திட்டம், சுயசார்பு இந்தியா (SRI) நிதித் திட்டம், காதி வளர்ச்சி பயிற்சித் திட்டம், மகளிர் தென்னை நார் கயிறு தயாரிப்புத் திட்டம் போன்ற திட்டங்களின் பயனாளிகள் புது தில்லியின் கடமைப் பாதையில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பைக் காண சிறப்பு விருந்தினர்களாக பாதுகாப்பு அமைச்சகத்தால் அழைக்கப்பட்டுள்ளனர்.

பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தின் கீழ் மொத்தம் 100 பயனாளிகளும் காதி வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற 199 கைவினைஞர்களும், மகளிர் தென்னை நார் கயிறு திட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட 50 பெண் பயனாளிகளும், 2026 ஜனவரி 26 அன்று நடைபெறும் குடியரசு தின விழாவில் கலந்து கொள்கின்றனர். இந்த பயனாளிகள் நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

இதன் ஒரு பகுதியாக, மத்திய குறு, சிறு நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் திரு ஜிதன் ராம் மஞ்சி, இணையமைச்சர் செல்வி ஷோபா கரந்த்லாஜே ஆகியோர் 2025 ஜனவரி 25 அன்று புது தில்லியில் தேசிய சிறு தொழில்கள் கழகத்தில் பயனாளிகளுக்கு இரவு விருந்து வழங்குகின்றனர். தேசிய தலைநகரில் தங்கியிருக்கும் போது, சிறப்பு விருந்தினர்கள் வரலாற்று நினைவுச்சின்னங்கள், பிரதமர் அருங்காட்சியகம் போன்றவற்றைப் பார்வையிடுவார்கள்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2218171&reg=3&lang=1

***

TV/PLM/RJ


(रिलीज़ आईडी: 2218264) आगंतुक पटल : 12
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Gujarati , Urdu , हिन्दी , Malayalam