எரிசக்தி அமைச்சகம்
குடியரசு தின அணிவகுப்பில் மத்திய மின்சார அமைச்சகம் சார்பில் ‘பிரகாஷ் கங்கா’ அலங்கார ஊர்தி இடம் பெறுகிறது
प्रविष्टि तिथि:
23 JAN 2026 1:02PM by PIB Chennai
குடியரசு தினவிழாவையொட்டி புதுதில்லியில் உள்ள கடமைப் பாதையில் நடைபெறும் அணிவகுப்பில் மத்திய மின்சார அமைச்சகம் சார்பில் "பிரகாஷ் கங்கா" என்ற பிரமாண்டமான அலங்கார ஊர்தி இடம் பெறுகிறது. தற்சார்பு மற்றும் வளர்ச்சியடைந்த இந்தியாவை வலுப்படுத்துதல் என்ற தலைப்பில் இந்த அலங்கார ஊர்தி அணிவகுத்துச் செல்ல உள்ளது.
இந்தியாவின் மாற்றத்திற்கான நடவடிக்கைகள் குறித்தும் தூய்மை மற்றும் நீடித்த எரிசக்திக்கான இந்தியாவின் தலைமைத்துவத்தை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பிரகாஷ் கங்கா என்றால் ஒளி வீசும் நதி என்ற பொருள்படும் வகையில் இந்த அலங்கார ஊர்திக்கு பெயரிடப்பட்டுள்ளது.
தேசிய மின் கட்டமைப்பில் தடையற்ற மற்றும் தொடர்ச்சியான மின் விநியோகத்தை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை இந்த ஊர்தி எடுத்துக்காட்டுகிறது. இந்த ஊர்தியின் மையப் பகுதியில் சூரிய சக்தி மின் உற்பத்திக்கான தகடுகள் வேயப்பட்டு இல்லம்தோறும் சூரியசக்தி என்ற கருத்தைப் பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2217615®=3&lang=1
****
TV/SV/KPG/SH
(रिलीज़ आईडी: 2217846)
आगंतुक पटल : 19