PIB Headquarters
azadi ka amrit mahotsav

இணையவழி அச்சுறுத்தல்களுக்கு எதிராக பாதுகாப்பான நம்பகத்தன்மையுடன் கூடிய கட்டமைப்புகளை உருவாக்குதல்

प्रविष्टि तिथि: 23 JAN 2026 9:45AM by PIB Chennai

இந்தியாவில் நிர்வாகம், வர்த்தகம் மற்றும் மக்கள் சேவைகளில் முன்னெப்போதும் இல்லாத அளவில் ஏற்பட்டுள்ள விரைவான டிஜிட்டல் மாற்றங்கள் காரணமாக இணையவழி சேவைகள் அதிகரித்துள்ளது. மின்னணு வர்த்தகம் முதல் ஆன்லைன் பொதுச் சேவைகள் வரை டிஜிட்டல் தொழில்நுட்பம் மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஒருங்கிணைந்த அங்கமாக மாறியுள்ளது. டிஜிட்டல் அடிப்படையிலான பயன்பாடுகள் அதிகரித்து வருவதன் காரணமாக பாதுகாப்பு அம்சங்களை வலுப்படுத்துவதுடன் நாட்டின்  பாதுகாப்பிற்கும் உயர் முன்னுரிமை அளிக்க வேண்டியது அவசியமாக உள்ளது.

கணினி அவசரகால மீட்புக் குழுவின் தொடர் நடவடிக்கைகள் இணையவழிப் பாதுகாப்பு அம்சங்களில் சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. உலகப் பொருளாதார மன்றம். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், பிரான்சில் உள்ள ஏஎன்எஸ்எஸ்ஐ போன்ற முன்னணி அமைப்புகளுடன் இணைந்து செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான சைபர் அச்சுறுத்தல்களைக் கண்டறிதல், இணையவழிப் பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பக் கட்டமைப்புகள் ஆகியவற்றை மேம்படுத்தும் பணிகள் முக்கியத்தும் பெற்றுள்ளன.

கணினி அவசரகால குழுவின் செயல்பாடுகளால் 2025-ம் ஆண்டில்  29.44 லட்சத்துக்கும் அதிகமான இணையவழி புகார்களைக் கையாண்டுள்ளது. முக்கிய தகவல் தொடர்பு தொழில்நுட்ப உள்கட்டமைப்புகளை முழுமையாக தணிக்கை செய்வதற்கும் பாதிப்புக் குறித்த மதிப்பீடு செய்யும் திறனை அதிகரிக்கும் வகையில், 231 இணையப் பாதுகாப்பு தணிக்கை நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. மேலும் சைபர் பாதுகாப்பு மையம் என்ற திட்டத்தின் கீழ் 1,427 நிறுவனங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2217537&reg=3&lang=1

 

**

AD/SV/KPG/PD


(रिलीज़ आईडी: 2217699) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Gujarati , Urdu , हिन्दी