ஊரக வளர்ச்சி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரதமரின் கிராம சாலைகள் திட்டம் நான்காம் கட்டத்தின் கீழ் 10,000 கி.மீ.க்கும் அதிக நீளமுள்ள சாலைத் திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி

प्रविष्टि तिथि: 22 JAN 2026 2:47PM by PIB Chennai

பிரதமரின் கிராம சாலைகள் திட்டம் நான்காம் கட்டத்தின் கீழ் ஜம்மு  காஷ்மீர்சத்தீஸ்கர்உத்தராகண்ட்ராஜஸ்தான்இமாச்சலப் பிரதேசம்சிக்கிம் ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 10,000 கி.மீ.க்கும் அதிக நீளமுள்ள சாலைத் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தொலைதூர மலைப்பகுதிகளிலிருந்து கிராமப்புறங்களின் மையப்பகுதி வரை பரவியுள்ள இந்த சாலைகள்உள்கட்டமைப்பு மேம்பாட்டை மட்டும் பிரதிநிதித்துவம் செய்யவில்லைஅவை முன்னேற்றத்திற்கான முக்கியப் பாதைகளும் ஆகும். இந்த சாலைகள் அமைக்கப்படுவதன் மூலம்முன்பு  தனிமைப்படுத்தப்பட்ட சுமார் 3,270 குடியிருப்புகள் இணைப்பு மற்றும் முக்கிய சேவைகளுக்கான அணுகலைப் பெறும். சுகாதாரம்கல்வி மற்றும் மேம்பட்ட வாழ்வாதாரங்களுக்கு இடையிலான இடைவெளியைக் குறைப்பதன் மூலம்இந்த சாலைகள் கிராமப்புற வாழ்க்கையை வெகுவாக மாற்றும்.

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் 2024, செப்டம்பர் 11 அன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், "பிரதமரின் கிராம சாலைகள் திட்டம் - IV- ஐ 2024-25 முதல் 2028-29 நிதியாண்டு வரை  செயல்படுத்தும்" ஊரக வளர்ச்சித் துறையின் முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் மொத்தச் செலவு ரூ. 70,125 கோடியாகும். இதில் மத்தியப் பங்கு ரூ. 49,087.50 கோடிமாநிலப் பங்கு ரூ. 21,037.50 கோடி.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2217233&reg=3&lang=1  

***

TV/SMB/SE


(रिलीज़ आईडी: 2217389) आगंतुक पटल : 13
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali