பாதுகாப்பு அமைச்சகம்
விமானப்படை சார்பில் வந்தே மாதரம் பாடலின் 150-ம் ஆண்டு கொண்டாட்டம்
प्रविष्टि तिथि:
22 JAN 2026 9:02AM by PIB Chennai
இந்தியா தனது தேசியப் பாடலான 'வந்தே மாதரம்' பாடலின் 150-வது ஆண்டு விழாவை, நாடு முழுவதும் உள்ள முக்கிய பொது இடங்களில் மக்கள் பங்கேற்பு நிகழ்ச்சிகள், கலாச்சார நிகழ்வுகள், ராணுவ இசைக்குழு நிகழ்ச்சிகள் ஆகியவை மூலம் கொண்டாடுகிறது. தேசிய பெருமையையும் ஒற்றுமையையும் வளர்ப்பதே இந்தக் கொண்டாட்டத்தின் நோக்கமாகும்.
இந்தக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, 31 இசைக்கலைஞர்களைக் கொண்ட இந்திய விமானப்படை (IAF) இசைக்குழு, 2026 ஜனவரி 21 அன்று புது தில்லியின் ராஜீவ் சௌக்கில் உள்ள ஆம்பிதியேட்டர் அரங்கில் சிறப்பு நிகழ்ச்சியை நடத்தியது. 45 நிமிட நிகழ்ச்சியில் பல்வேறு வகையான இசைக் கருவிகள் மூலம் வசீகரிக்கும் இசைகள் இணைக்கப்பட்டன. வந்தே மாதரம், சிந்தூர் என்ற பாடல் ஆகியவை ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் நமது படைகளின் செயல்பாட்டை எடுத்துக்காட்டும் வகையில் அமைந்திருந்தன. அது நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக இருந்தது.
பல நூற்றாண்டுகளாக, இந்திய கலாச்சாரத்தின் ஒரு அற்புதமான ரத்தினமாக இசை தனித்து நிற்கிறது. இது இந்தியாவின் வளமான ராணுவ பாரம்பரியத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகவும், ஒற்றுமையை வளர்ப்பதாகவும், துணிச்சலை ஊக்குவிப்பதாகவும் இருந்து வருகிறது. 1944-ம் ஆண்டு விமானப்படை இசைக்குழு தொடங்கப்பட்டதிலிருந்து, இந்திய இசை, மேற்கத்திய இசை ஆகிய இரண்டின் தனித்துவமான திறமையுடன், நாட்டின் ராணுவ பாரம்பரியத்தில் ஒரு முக்கிய அம்சமாகவே இது இருந்து வருகிறது. இந்திய விமானப்படை இசைக்குழு, அதன் வசீகரிக்கும் நிகழ்ச்சிகள் மூலம் தேசபக்தியை ஊக்குவிப்பதையும., ஒற்றுமையின் உணர்வைப் பரப்புவதையும் நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது.
***
(Release ID: 2217140)
AD/PLM/KR
(रिलीज़ आईडी: 2217185)
आगंतुक पटल : 19