PIB Headquarters
azadi ka amrit mahotsav

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் தாக்கம் குறித்த உச்சி மாநாடு - 2026

प्रविष्टि तिथि: 21 JAN 2026 1:58PM by PIB Chennai

இந்தியா ஏற்பாடு செய்துள்ள செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் தாக்கம் குறித்த உச்சி மாநாடு - 2026, உலகளவில், வளரும் நாட்டில் நடத்தப்படும் முதலாவது சர்வதேச செயற்கை நுண்ணறிவு தொடர்பான உச்சி மாநாடாக அமைந்துள்ளது.

புது தில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில், 2026 பிப்ரவரி 16 முதல் 20 - ம் தேதி வரை ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில், கொள்கை, ஆராய்ச்சி, தொழில் மற்றும் பொது ஈடுபாடு போன்ற அம்சங்களில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் தாக்கம் குறித்து விவாதிக்கப்படவுள்ளது. இந்த மாநாடு மக்கள் மேம்பாடு, புவிசார் சூழல் மற்றும் வளர்ச்சி ஆகிய 3 அடிப்படைக் கொள்கைகள் அல்லது 'சூத்திரங்களை' அடிப்படையாகக் கொண்டிருக்கும்.

இந்த உச்சி மாநாட்டின் ஒருபகுதியாக நடைபெறும் கண்காட்சியில், கருப்பொருள் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ள ஏழுக்கும் அதிகமான  அரங்குகளில், 400-க்கும் கூடுதலான கண்காட்சியாளர்கள் பங்கேற்கின்றனர். இந்தக் கண்காட்சியை 1.5 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்வையிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செயற்கை நுண்ணறிவு என்பது இந்திய வளர்ச்சி நடவடிக்கைகளின்  உந்துசக்தியாக உள்ளது. இந்தத் தொழில்நுட்பம் நிர்வாக நடைமுறைகளை வலுவடையச் செய்வதுடன், பொதுச் சேவைக்கான சூழலையும் மேம்படுத்துகிறது. இந்த செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதி செய்யும் வகையில், அனைத்துத் துறைகளிலும் விரிவான பயன்பாட்டை முன்னிலைப்படுத்துவத்தை இந்தியா நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது. வரும் 2047-ம் ஆண்டிற்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையை பிரதிபலிக்கும் வகையில் இது அமைந்துள்ளது. இந்தியாவின் மொழியியல் மற்றும் கலாச்சார பன்முகத்தன்மை, பல்வேறு பொதுத் தேவைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட பன்மொழி மற்றும் பன்முக செயற்கை நுண்ணறிவு கட்டமைப்புக்களை மேம்படுத்துவதற்கு இது வகை செய்கிறது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி சார்ந்த இந்தியாவின் செயல்பாடுகள் அடிப்படையில், இந்த உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்த உச்சி மாநாட்டில், பல்வேறு நாடுகளை சேர்ந்த  தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள், கண்டுபிடிப்பாளர்கள், துறை சார்ந்த நிபுணர்கள் பங்கேற்கின்றனர்.  நிர்வாகம், புத்தாக்கம், நீடித்த வளர்ச்சி ஆகியவற்றில் மாற்றங்களை கொண்டு வரும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் வலிமையை விவாதிக்கவும், அது சார்ந்த முன்னெடுப்புகள் காட்சிப்படுத்தப்பட்ட உள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2216805&reg=3&lang=1

---

(Release ID: 2216805)

AD/SV/RK


(रिलीज़ आईडी: 2217000) आगंतुक पटल : 13
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Gujarati