பாதுகாப்பு அமைச்சகம்
குடியரசு தின அணிவகுப்பு 2026: இந்திய கடற்படையின் சிறப்பு முன்னோட்டம்
प्रविष्टि तिथि:
20 JAN 2026 5:46PM by PIB Chennai
புது தில்லி, ஜன. 20: 2026-ஆம் ஆண்டு குடியரசு தின அணிவகுப்பிற்கான இந்திய கடற்படையின் சிறப்பு முன்னோட்ட நிகழ்ச்சி 'கடமைப் பாதையில்' நடைபெற்றது. 144 இளம் கடற்படை வீரர்களைக் கொண்ட அணிவகுப்புப் பிரிவை லெப்டினன்ட் கரண் நாக்யால் வழிநடத்துகிறார். பல்வேறு மாநிலங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த வீரர்கள், சுமார் இரண்டு மாத கடும் பயிற்சிக்குப் பிறகு இதில் பங்கேற்கின்றனர்.
இந்த ஆண்டு கடற்படையின் அலங்கார ஊர்தி , "வலிமையான தேசத்திற்கு வலிமையான கடற்படை" என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டுள்ளது. இதில் 5-ஆம் நூற்றாண்டின் 'ஐஎன்எஸ்வி கௌண்டின்யா' பாய்மரக் கப்பல் முதல் மராட்டிய கடற்படையின் கப்பல்கள் வரை இடம்பெறுகின்றன. மேலும், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் விக்ராந்த், நீலகிரி ரகப் போர்க்கப்பல்கள், கல்வாரி ரக நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் ஜிசாட்-7ஆர் செயற்கைக்கோள் மாதிரிகள் இந்தியாவின் தற்சார்பு வலிமையைப் பறைசாற்றுகின்றன.
பெண் அதிகாரிகளான தில்னா மற்றும் ரூபா மேற்கொண்ட 'நவிகா சாகர் பரிக்ரமா-II' உலகப் பயண வழித்தடம் மற்றும் தேசிய மாணவர் படையில் கடற்படை பிரிவில் உள்ள மாணவிகளின் பங்கேற்பு மூலம் பெண்களுக்கு அதிகாரமளித்தல் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது. 80 இசைக்கலைஞர்கள் கொண்ட கடற்படை இசைக்குழு, பாசறை திரும்பும் நிகழ்வில் பங்கேற்கிறது. இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் பாதுகாப்பை உறுதி செய்யும் கடற்படையின் உறுதிப்பாட்டை இந்த அணிவகுப்பு வெளிப்படுத்துவதாக வைஸ் அட்மிரல் பிரவீன் நாயர் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2216494®=3&lang=1
வெளியீட்டு எண்: 2216494
****
TV/VK/SH
(रिलीज़ आईडी: 2216630)
आगंतुक पटल : 9