சுரங்கங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய புவியியல் திட்ட வாரியக் கூட்டம் ஜனவரி 21 அன்று புதுதில்லியில் நடைபெறுகிறது

प्रविष्टि तिथि: 20 JAN 2026 11:09AM by PIB Chennai

மத்திய சுரங்கங்கள் அமைச்சகத்தின் இந்திய புவியியல் ஆய்வு நிறுவனம் 65-வது மத்திய புவியியல் திட்ட வாரியக் கூட்டத்தை 2026 ஜனவரி 21 அன்று புதுதில்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழும அலுவலகத்தில் நடத்த உள்ளது. இந்த முக்கிய நிகழ்வு மத்திய அமைச்சகங்கள், மாநில அரசுகள், தொழில்துறை, கல்வி நிறுவனங்கள் மற்றும் சுரங்கத்துறையைச் சேர்ந்த முக்கியமானவர்களை ஒருங்கிணைத்து புவி அறிவியல் முன்னேற்றங்கள், கனிம ஆய்வு, உத்திகள், சவால்களுக்கான தீர்வுகள் மற்றும் தூய்மை எரிசக்தி, புவிசார் இடர்பாடு, நீடித்த வளர்ச்சி ஆகியவற்றில் புதிய முன்முயற்சிகள் குறித்து விவாதிக்க உள்ளது.

மத்திய புவியியல் திட்ட வாரியம் என்பது மத்திய சுரங்க அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய புவியியல் ஆய்வு நிறுவனத்தின் முக்கிய தளமாகும். இதில் இந்திய புவியியல் ஆய்வு நிறுவனத்தின் ஆண்டு கள பருவ திட்டத்தின் கீழ் பணிகளில் ஏற்படும் இரட்டிப்பை தவிர்ப்பதற்கு விவாதிக்கப்படுகிறது.

இந்தக் கூட்டத்தில் மத்திய புவியியல் திட்ட வாரியத்தின் உறுப்பினர்கள், மாநில அரசுகள், மத்திய – மாநில அரசுகளின் கனிம ஆய்வு முகமைகள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழில்துறையினர் இந்திய புவியியல் ஆய்வு நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றுவதற்கான தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்கின்றனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2216338&reg=3&lang=1

***

AD/IR/KPG/KR


(रिलीज़ आईडी: 2216419) आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Gujarati , Telugu