பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அசாமில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்காக 15-வது நிதிக்குழு மானியத்தின் கீழ் ரூ.213.9 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது

प्रविष्टि तिथि: 20 JAN 2026 12:54PM by PIB Chennai

அசாமில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்காக 15-வது நிதிக்குழு மானியத்தின் கீழ் ரூ.213.9 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது.  இது 2025-26-ம் நிதியாண்டிற்கான முதலாவது தவணைத் தொகையாகும். இந்தத் தொகை மாநிலத்தின்  அனைத்து  2,192 தகுதி வாய்ந்த கிராமப் பஞ்சாயத்துகள், 182 தகுதி வாய்ந்த வட்டார பஞ்சாயத்துகள், 27 தகுதி வாய்ந்த மாவட்ட பஞ்சாயத்துகளுக்காக விடுவிக்கப்பட்டுள்ளது.

மத்திய பஞ்சாயத்து ராஜ் மற்றும் ஜல்சக்தி (குடிநீர் மற்றும் தூய்மைப் பணித்துறை) மூலம் மாநிலத்தின் பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளுக்கு 15-வது நிதிக்குழு மானியத்தை விடுவிக்க மத்திய அரசு பரிந்துரை செய்கிறது. அதைத் தொடர்ந்து மத்திய நிதி அமைச்சகம் இந்த நிதியை விடுவிக்கிறது. ஒரு நிதியாண்டில் இரண்டு தவணைகளாக இத்தொகையை விடுவிக்க பரிந்துரைக்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2216373&reg=3&lang=1

***

AD/IR/KPG/KR


(रिलीज़ आईडी: 2216398) आगंतुक पटल : 12
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Assamese